பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னே எழுத்துப் பேய் என்றும், கிராம ஊழியனில் எழுதியவர்களே அடங்காப் பிடாரிகள், என்றும் குறிப்பிட்டு வந்தார்கள். பெரியவர்கள் போதனைகள் புரிந்தார்கள். அச்ச மில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே என்பது சரிதான். இருந்தாலும், அஞ்சுவது அஞ்சுக அறிவுடைமை என்பதை யும் நிஜனவில் கொள்ள வேண்டும்’ என்றும் எழுத்தில் ரெஸ்ட்ரெயின்ட் ஆக இருக்க வேண்டும்’ என்றும், இப்படி எழுதினுல் ரொம்ப காலம் எழுதிக்கொண்டிருக்க முடியாமல் போய்விடும் என்றும் அறிவுரைகள் வழங்கினர்கள்.

எனினும், கிராம ஊழியன் தனது லட்சியப் பாதையில்’ முன் போக்கில் முன்னேறிக் கொண்டிருந்தது.

ஐழியன் சிறுகதை விமர்சனங்களையும், புத்தக மதிப்புரை களேயும் சுவாரஸ்யமாக எழுதி வந்தது. தமிழ் பத்திரிகை கள் கிராமியப் பாடல்களே (நாடோடிப் பாட்டுகளே) சேகரித்து வெளியிட்டுக் கொண்டிருந்த காலம் அது, கிராம மக்களிடை யே வழங்கி வரும் கதைகளையும் தொகுத்துப் பிரசுரிக்க வேண்டியது அவசியம்’ என்று ஊழியன் வலியுறுத்தியதோடு நாடோடிக் கதைகள் பலவற்றை சேகரித்து வெளியிடவும் செய்தது.

இவ்வாறு பல வழிகளிலும், தான் இருப்பதை உணர்த்திக் கொண்டிருந்த கிராம ஊழியன்’ பத்திரிகை லாபகரமாக நடைபெறவில்லை. ரெட்டியாரின் இலக்கியக் காதலும் எழுத்து ஆர்வமும் தான் அதை நான்கு வருடகாலம் விடாது நடத்தி வருவதற்கு உரிய ஆதாரமாக இருந்தன.

அப்போது, யுத்தத்திற்குப் பிந்தியகாலச் சூழ்நிலையில் பத்திரிகை வெளியிட்டுக் கொண்டிருப்பதை விட அச்சு இயந்திரங்களை விற்று விடுவதன் மூலம் பெரும் லாபம் சம்பாதிக்க முடியும் என்ற உண்மை லிமிடெட் ஸ்தாபனத் தாருக்குப் புரிந்தது. அதைச் செயல் படுத்தினர்கள்.

34 / சரஸ்வதி காலம் D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/40&oldid=561121" இலிருந்து மீள்விக்கப்பட்டது