பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ஆனந்த விகடன் லாபகரமாக பகுத்தறிவுப் போட்டி" நடத்தி வந்ததைக் கண்டு, நாமும் அப்படி பிசினஸ் பண்ண லாமே என்று ஆசை பற்றி, அந்தக் காலத்தில் பத்திரிகை ஆரம்பித்தவர்கள் அநேகர். அப்படி ஆரம்பிக்கப்பட்டு, சுமா ராக நடந்து வந்தவற்றுள் சந்திரோதயம் என்பதும் ஒன்று. இடைக்காலத்தில் அது தளர்வெய்தியது. அதை வாங்கி பகுத்தறிவுப் போட்டி இல்லாமல், பிரமாதமாக நடத்த முன் வந்தார் தொழில் அதிபர் ஒருவர் 1946ல்.

இதற்கு க. நா. சுப்ரமண்யம் ஆசிரியரானுர். சி. சு. செல்லப்பா துணை ஆசிரியர்.

இதன் போக்கும், இதில் வந்த சில பகுதிகளும் க. நா. சு. வின் ‘சூருவளியை நினைவு படுத்திக் கொண்டிருந்த போதிலும், இதில் இலக்கியத்தரம் அதிகமிருந்தது. புதுமைப்பித்தனின் “கபாடபுரம் இதில் தொடராக வந்தது. ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பரசுப்ரமண்யன், ரகுநாதன், தி. ஜானகிராமன், ஸ்வாமி தாத ஆத்ரேயன் முதலியவர்கள் அடிக்கடி கதைகள் எழுதி ஒர்கள். லா. ச. ரா. வின் கதைகள் விசேஷமாக இருந்தன. ‘மணிக் கொடி’யின் கடைசி கட்டத்தில் எழுதத் துவங்கிய லா. ச. ராமாமிர்தம் முதலில் சாதாரண முறையில்தான் கதை கள் எழுதி வந்தார். பிறகு சக்தி இதழ்களில் எழுதலானுர். கதை விஷயத்தில் அதிக அக்கரை செலுத்துவதை விட, அதைச் சொல்லும் முறையிலும் எழுத்து நடையிலும் புதுமைச் சோதனைகள் பண்ணுவதில் ஆர்வம் காட்டினர். அவரது கதைக் கலையின் பரிணுமத்தை பின்னர் கலைமகளிலும் அதன் பிறகு சந்திரோதயம்’ இதழ்களிலும் நன்கு உணர முடித்தது.

‘சத்திரோதயம் இதழ்கள் சி. சு. செல்லப்பாவின் கதை எழுதும் ஆற்றலே நன்கு வெளிக் கொணர்ந்தன. பி. எஸ். ராமையாவின் மணிக்கொடி மூலம் எழுத்துலகத்துள் பிரவே சித்த இவர் அந்த மணிக்கொடி காலம் முடிந்து போனதும், ஒதுங்கியிருந்ததாகவே தோன்றியது.

38 / சரஸ்வதி காலம் 国

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/44&oldid=561125" இலிருந்து மீள்விக்கப்பட்டது