பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் (காளிதாஸன், தாகூர் வகையரா) குறித்து கி. சந்திர சேகரன், டாக்டர் வே. ராகவன், ரா. ரீ. தேசிகன் முதலானுேர் எழுதி வந்தார்கள். ப. கோதண்டராமன் ஐரோப்பிய ரஷ்ய இலக்கியங்கள் பற்றி எழுதினர். எஸ். மகராஜன் தனித்துவ மான கட்டுரைகள் எழுதி வந்தார். கலாசாரமும் வருக்கமும்,' மொழியும் மரபும் இலக்கிய விமர்சனம் என்ற தன்மைகளில் அ. சீ. ரா. சிந்தனைகள் வழங்கினர். தன்ஒளி என்ற தலைப் பில் அக இயல், ஆத்மீக ஆய்வு, தத்துவ ஆராய்ச்சி முதலி யன அடங்கிய, பெரிய விஷயம் ஒன்று தொடராக வந்து கொண்டிருந்தது. அ. சீ. ரா. வின் அருமையான நாடகங்கள் அடிக்கடி பிரசுரமாயின. வேறு சிலரும் அவ்வப்போது நாடகங் கள் உதவினர். இதழ் தோறும் ஒன்று அல்லது இரண்டு சிறு கதைகளே இடம் பெற்றன. ப. ரீனிவாசன், கரிச்சான் குஞ்சு, வ. க., அசோகன், ஸ்வாமிநாத ஆத்ரேயன், துறைவன் போன்றவர்களின் படைப்புகள் அவை.

சிந்தனை சிறப்பாக ஒரு ஆண்டு மலர் தயாரித்த பிறகு ஓய்ந்து விட்டது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, எல்லா மொழிகளிலும் எண் ணற்ற பத்திரிகைகள் தோன்றலாயின. தமிழ் நாட்டிலும் நாளொரு பத்திரிகை பிறந்து, பொழுதொரு பத்திரிகை சாவது என்பது கால நியதி ஆகத் திகழ்ந்தது.

"பொழுது தவறிலுைம் பத்திரிகை புதிதாய்த் தோன்றுவது தவருத இந்தக் காலத்தில் தேனி பிறப்பதற்காக நாம் கலங்க வில்லை. எத்தனை எத்தனையோ பத்திரிகைகள் தோன்றியும் தமிழின் தேவை பூர்த்தி ஆகவில்லை என்பதே நம் எண்ணம். அத்தேவை முழுவதையும் நாம் பூர்த்தி செய்து விடுவோம் என நாம் உறுதி அளிக்கத் தயாராக இல்லை. என்ருலும் ஓரள வாவது பூர்த்தி செய்ய தேனீக்கு வலிமை உண்டு. ஏராளமாய் உண்டு. தேனியால் முடியும்’ என்று ஒரு குரல் எழுந்தது கும்பகோணத்திலிருந்து. -

ü வல்லிக் கண்ணன், 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/47&oldid=561128" இலிருந்து மீள்விக்கப்பட்டது