பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையை நடத்துவதில் உள்ள சிரமங்களேயும் சோதனைகளேயும் அறியாதவரும் இல்லே.

இலக்கியப் பத்திரிகைகளின் வரலாறுகளே அவர் நன்கு அறிந்தவர்தான். அவரே 1950 - 51 - ல் விடி வெள்ளி: என்ருெரு பத்திரிகை நடத்தி அனுபவமும் பெற்றிருந்தார்.

அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளே அலசி ஆராய்ந்த வாரப் பத்திரிகை 'விடிவெள்ளி அமைப்பிலும் உள்ளடக்கத் திலும் அது வசீகரமாகத்தான் இருந்தது. ஆயினும் அது ஒரு வருட காலத்துக்கு மேல் வாழவில்லே. இந்த முயற்சியில் வி. பா. மூவாயிரம் ரூபாய் இழந்து அனுபவம் பெற்றிருந்தார்.

பின்னர் ஹனுமான் வாரப் பத்திரிகையின் கடைசி கால ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. இந்த ஹனுமான் தனி வரலாற்றுச் சிறப்பு உடையது. 1930 களில் மிடுக்காக வளர்ந்து வந்த தேசீய வார ஏடு இது. யாராலோ ஆரம்பிக்கப்பட்டு, சங்கு சுப்ரஹ்மண்யம் அவர் களின் ஆசிரியப் பொறுப்பில் வளர்ந்து வந்த இதற்கு, பெயர் பெற்ற எழுத்தாளர்கள் பலரும் வெவ்வேறு கால கட்டத்தில் பணி புரிந்திருக்கிருர்கள். தி. ஜ. ர., ந. பிச்சமூர்த்தி, இளங் கோவன் (ம. க. தணிகாசலம்), அப்புறம் கருவி (ராமலிங்கம்) * குண்டுசி கோபால், பிறகு பி. எம். கண்ணன் என்று அநேகர் சேவையினுலும் வளர்ந்து, நன்கு பரவி வந்த பத்திரிகை 1940 களின் பிற்பகுதியில் தளர்வெய்தியது. புதிதாகச் சிலர் நிறையப் பணத்தை அதில் முடக்கினர்கள். என்ருலும், இருப்பது தெரியாமல் அது உயிர் வைத்துக் கொண்டிருந்தது. பத்திரிகைக்குப் பணம் போட்டிருந்தவர்களில் ஒருவர் 1950-ல் எனக்கு அறிமுகமானுர், அவர் என்னை வைத்து ஏதாவது பண்ண முடியுமா என்று ஒரு முயற்சி செய்ய ஆசைப்பட்டார். நான் இரண்டு வருடங்கள் ஹனுமான் வாரப் பத்திரிகைக்காக வெகு கடுமையாக உழைத்தேன். அது கவனிக்கப்பட வேண்டிய பேச்சுக்குப் பொருளாகக் கூடிய - ஒரு பத்திரிகை

48 / சரஸ்வதி காலம் 町

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/54&oldid=561135" இலிருந்து மீள்விக்கப்பட்டது