பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் வெளிவருவதற்கு நம்மால் ஆன பணியைச் செய்ய வேண்டும் என்ற இந்த ஆசைகளால் உந்தப்பட்டு சரஸ்வ. வெளியிடுகிருேம்.

"நாட்டு மக்களே உயர்த்துவதற்காக எழுத வேண்டும்; சமூகத் தைச் சக்தி வாய்ந்ததாக்குவதற்காக எழுத வேண்டும்; கிராமவாசியும் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் எழுத வேண்டும் என்று அமரர் வ. ரா. அவர்கள் காட்டிய இந்தப் பாதைதான் நாங்கள் விரும்பும் பாதை, செல்லும் பாதை."

முதல் இதழ் அட்டையில் வ. ரா. படம் தான் அச்சாகியிருந் தது. அதில் ஜெயகாந்தன் கதையும், தமிழ்ஒளி கவிதையும் பிரசுரமாயின. தமிழ் ஒளி விஜயரங்கம் என்ற பெயரில் ஒரு கதையும் எழுதியிருந்தார். மற்றும் ஸி. எஸ். சுப்ரமணியம் அ.லெ. நடராஜன், இஸ்மத் பாஷா ஆகியோரும் எழுதி விருந்தார்கள்.

சரஸ்வதி ஆரம்பிப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் தான் ஜெயகாந்தன் எனக்கு அறிமுகமானர். சக்தி - ஹனுமான் காலத்தில் ஒரு நாள் தமிழ் ஒளி அவரை என் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தினர். இஸ்மத்பாக்ஷாவின் சமரனில் அவர் இருந்ததும், அதில் அவர் எழுதி வந்த ஒரு சில கதைகளும் எனக்குத் தெரியும். இந்த அறிமுகத்திற்குப் பின்னர் ஹனு:மானில் அவரது ஒன்றிரண்டு கதைகளே வெளி யிட்டேன். சரஸ்வதி ஆரம்பித்ததும் அதில் தொடர்ந்து எழுதினர் என்று வி. பா. குறிப்பிடுகிருர்.

தமிழ்ஒளி தான் ஜெயகாந்தன எனக்கும் அறிமுகம் செய்து வைத்தார். 'மனிதன் நடந்து கொண்டிருந்த காலம் அது. -ஹனுமானில் பிரசுரமான கதைகளையும், வேறு சில கதை களையும் தொகுத்து உதயம் என்ற சிறு புத்தகமாக அந்தச் சமயத்தில் ஜெ. கா. வெளியிட்டிருந்தார். -

சரஸ்வதி'யில் முதல் ஆண்டில் ஜெயகாந்தன் ఆశGp

54 / சரஸ்வதி காலம் [

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/60&oldid=561141" இலிருந்து மீள்விக்கப்பட்டது