பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்ஞானத்தை வளர்ப்பதற்காக அல்ல; விஞ்ஞானத்தை வளர்ப்பதற்காக எழுத வேண்டும்.

எழுத்தாளனுடைய பேணு, அவனுடைய வயிற்றை மட்டும் நிரப்பவோ, அல்லது காகிதத்தை நிரப்பி ஆத்ம சாந்தி கானு: வதற்கோ உரிய கருவி அல்ல. அது சமுதாய விரோதிகளுக்கு வாளாகவும், மக்களுக்குக் கேடயமாகவும் விளங்கவேண்டும்.' அடுத்து, உதயம் தொகுதி பற்றிய விமர்சனத்தில், தி.க.சி. கூறிய கருத்து : -

"சமுதாயத்திலுள்ள அநாகரிகச் சின்னங்களே, ஏழை பாழை களே, புகலிடம் அற்ருேரை. புறக்கணிக்கப்பட்டோரை ஜெய காந்தன் கதாபாத்திரங்களாக்குவதை நாம் வரவேற்கிருேம். முழு மனதுடன் வரவேற்கிருேம். ஆணுல் இவர்கள் ஏன் அநா கரிகச் சின்னம் ஆளுர்கள்; யார் இவர்களே அப்படி ஆக்கியது என்பதையும் அவர் நமக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.

ஒரு ஏழையின் முதுகிலே சாட்டையடி விழுகிறது. அவன் சாட்டையால் துடிப்பதை நாம் காண்கிருேம்; நெஞ்சம் பதைக் கிருேம். இந்தக் காட்சியை படம் பிடிப்பதுடன் கதாசிரியர் நின்றுவிடக் கூடாது. சாட்டையை யார் சொடுக்குகிருர்கள், சாட்டை பிடிக்கும் கரத்திற்கு யார் பக்க பலமாக நிற்கிருர்கள் என்பதையும் நமக்குக் காட்டவேண்டியது அவர் கடமை. அப் படியாளுல் தான் நாம் அந்தக் கொடுங்கரத்திலிருந்து சாட்டை யைப் பிடுங்க முடியும். இல்லாவிடில் பெருமூச்சு விட்டுக் கொண்டு நிற்கவேண்டியது தான்! .

கதாசிரியன் எதை எழுதினுலும் காரண காரியத்தோடு, வாச கர்களுக்கு நெஞ்சில் உரமூட்டும்படி, எதிர்காலத்தில் நம்பிக்கை தழைக்கும்படி எழுதவேண்டும். இல்லாவிடில் அவன் எழுத் துக்கள் அலங்கார சித்திரங்களாக ஒரு சிலருக்குத் திருப்தி அளிக்கலாமே தவிர, மிகப்பலருக்குப் பயனற்றதாய்ப் போய் விடும்.”

级 வல்லிக்கண்ணன், 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/65&oldid=561146" இலிருந்து மீள்விக்கப்பட்டது