பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியுலகத்தை எந்த முறையிலாவது பாதிக்கும் தன்மை பெற்று விடுகிறது. அப்பொழுது அது வெறும் அனுபவம் என்ற கர்ப்ப நிலையைத் தாண்டி விடுகிறது. பிறந்த குழந் தையாகி விடுகிறது. பிறகு பிறர் சூட்டும் பெயரும் பிறர் சுமத்தும் சுமையும் தானே அதன் வாழ்க்கை?...

ஒவ்வொரு கலைஞனுடைய எழுத்துக்கும் கொள்கை என்ற பெயர் இருந்தே தீர வேண்டும். இந்த முறையில் தமிழ் நாட்டில் தற்காலம் எழுதிவரும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு கொள்கை இருப்பது தென்படுகிறது. பொதுவாக அவர் களுடைய எழுத்துக்களைச் சில முக்கியமான பிரிவுகளின் கீழ்க் கொண்டு வந்து விடலாம்.

ஆனந்த விகடன், கலைமகள், மணிக்கொடி - இந்த மூன்று பத்திரிகைகளும் இந்தப் புது எழுத்திற்கு முதல் ஆதாரமாக இருந்தன என்பது சென்ற பத்து வருஷ இலக்கிய நிகழ்ச்சி களைக் கவனித்து வரும் எல்லோரும் அறிந்த விஷயம். புது எழுத்து முழுவதும் அநேகமாக அவற்றில் அடக்கமாகி இருக்கிறது என்றே சொல்லி விடலாம்.

இந்த மூன்று பத்திரிகைகளுமே ஒரு விதத்தில் மூன்று மனப் பான்ைமகளின் வாக்காக அமைந்து விட்டன.

ஆனந்த விகடன் நுனிப்புல் மேயும் மனப்பான்மை கொண் டது. ஆழ்ந்து எதையும் ஆராய அதற்கு விருப்பம் இல்லை. வாழ்க்கையின் கஷ்டங்களைக் கண்டு சகிக்க அதற்கு வெ றுப்பு. எனவே வாழ்க்கையில் மேலெழுந்த வாரியாகத் தென் படும் சுக செளகரியங்களை மட்டும் தான் அது வாழ்க்கையில் கண்டறிய வேண்டியவை என்று கொள்கிறது. ஹாஸ்யம், கிண்டல் - அதிலும் ஆழம் கிடையாது. சிக்கல்களே வெகு லேசாக ஒதுக்கி விட்டு முகம் கோணுதபடி வாழ்க்கையின் செளகரியமான அம்சங்களே மிகைப்படுத்திச் சித்தரிப்பது துக்கத்தையும் வீழ்ச்சியையும் மகத்தான சோகங்களையும் கண்டு கண் மூடிக் கொண்டு விடுவது.

[ வல்லிக் கண்ணன், 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/67&oldid=561148" இலிருந்து மீள்விக்கப்பட்டது