பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவுகளே தவிர வெட்டி விட்டாற் போல் ஒன்றுமே நிர்ண யிக்க முடியாது. வளர்ச்சி எந்த இடத்தில் எந்த தருணத் தில் நடைபெறுகிறது என்று எங்காவது சொல்ல முடியுமா? பொதுப்படையாக அடையாளம் கண்டு கொள்ளும் பொருட் டுத்துத்தான் பிரிவுகள் எல்லாமே...... .. , -

இந்த மூன்றிலும் ஒன்று தாழ்ந்தது, மற்ருென்று உயர்ந்தது என்று நான் சொல்ல முன்வரவே முடியாது. எதுவும் குறைந்ததல்ல, இகழத்தக்கதல்ல. மனிதசுபாவத்தின் மூன்று போக்குகள் இவ்வாறு, யதேச்சையாக, வேண்டு மென்று யாரும் வகுக்காமல், பிரிவு கொண்டு பரிமளிக்கின்றன. ஒவ் வொரு மனப்பான்மைக்கும் நிச்சயம் தர்க்கரீதியாகவே ஒர ளவு சித்தாந்தமாக விளங்க இடமிருக்கிறது. எல்லாவற்றி லும் உண்மை இருக்கிறது. விகிதத்தில் தான் வித்தியாசம், அதிலும் அபிப்பிராய பேதத்திற்கு ஏராளமாக ஆதரவு இருக்கிறது. . . . . . . . :

தமிழ் நாட்டில் சென்ற பத்து வருஷங்களுக்குள் உள்ளத் தின் ஒலிபரப்பு இவ்விதமாக இவ்வளவு தெளிவுடன் சிற்றலை நீட்டலே, நடுத்தர அலே என்று ரேடியோவில் சொல்லுவது போலப் பாகுபாடு பெற்றதே ஒரு பெரிய நிகழ்ச்சியாகும்.” (கு. ப.ரா. - புது எழுத்து’ என்ற கட்டுரையில்.)

மணிக்கொடி மனுேபாவத்தினர் மறுமலர்ச்சி எழுத்தாளர் என மதிக்கப்பட்டனர். அவர்களது படைப்புக்கள் மறு மலர்ச்சி இலக்கியம்’ என்று கருதப்பட்டன.

மறுமலர்ச்சி என்று பெயர் வந்தது எதனுல்? இதற்கும் கு. ப. ரா. வின் எழுத்திலேயே விளக்கம் கிடைக்கிறது. .

“நமது பழைய எழுத்துக் காலம் சங்ககாலம். அப்பொழுது எழுத்து, வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அதன் லட்சியக் கருவி யாகவும் இருந்தது. தலைவனும் தலைவியும் தமிழ்க் காதல் புரிந்த காலத்தில் உதித்தது அது. இடைக்காலத்தில் தமிழ் எழுத்து வாழ்க்கைக்குச் சம்பந்தமற்றுப் போயிற்று ஏதோ ஒரு விபரித

璽 வல்லிக் கண்ணன் / 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/69&oldid=561150" இலிருந்து மீள்விக்கப்பட்டது