பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது எழுத்துக்கள் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்தன; மனச்சாட்சியின் நெற்றியில் சூடு போட்டன; சூதுள்ள நெஞ்சுக்கு நஞ்சாய் இருந்தன.

அவரது எழுத்துக்கள் இருளில் மறைகிறவர்களை, இருளில் நடக்கிறவற்றை, விளக்குப் போட்டுக் காட்டின. மனிதன் செய்யும் பாதகங்களே மறைக்க உபயோகிக்கும் பண்புக்கவசங் களே உடைத்தெறிந்தன. பழமைத் திரைகளைக் கிழித்தெறிந் தன. அவர் எழுத்துக்களின் காலடியில் விழுந்து குவிந்த முகமூடிகளுக்குத்தான் கணக்கு வழக்கு உண்டா?

அவரது விளக்கைக் கண்டு அஞ்சி எத்தனையோ மனித ஆந்தைகள் அன்று இருளே நோக்கி ஓட்டம் பிடித்தன. பழமை அழுகலையே தேடிச் சுவைத்து வந்த எத்தனையோ கரப்பான்கள் அன்று ஓட்டம் பிடித்தன.

கையும் மெய்யுமாய்ப் பிடித்துக் கைது செய்து, குற்றப் பத் திரிகை வாசிக்கும் அவரது எழுத்துக்கள் எத்தனையோ விசிறி மடிப்புகளுக்கும், விபூதிப் பட்டைகளுக்கும் விஷம் மாயிருந்தன. -

காரணம் புதுமைப் 'பித்தன் ஒரு கலகக்காரர்; குருட்டுப் பழமையின் தீராத விரோதி.

புதுமைப் பித்தனின் இந்த ஆன்மீக சக்தியும் ஆன்மீகத் துணிவும் தான் அவரது இலக்கியத்துக்கு இந்த குண விசே வடிங்களைத் தந்தன.

கருத்தில் பிரதிபலித்த கலகம்தான் அவரது கதை யுருவத்தி லும் வெளிப்பட்டது.

அவரது கதையுருவ அமைப்பை மட்டுமே மெச்சிப் பேசுகி றவர்கள், அவர் இலக்கியத்தின் உயிர் நாடியைத் தொட்டுப் பார்க்கத் தவறியவர்கள் ஆவர்.

壹 வல்லிக் கண்ணன், 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/79&oldid=561160" இலிருந்து மீள்விக்கப்பட்டது