பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலகக்காரர் தான் -ஆனுல் புரட்சிக்காரரில்லை புதுமைப் பித்தன். r

நெஞ்சிலே கனலே மூட்டி விட்டு, பிறகு நிராசை நிரப்புகிற வரும் புதுமைப் பித்தனே தான்!

சமுதாயப் பிரச்னைகளே-அன்றைய இலக்கியச் சம்பிரதாயம் பாராமல் - தமிழிலக்கியத்தில் போட்டு உடைத்து நாட் டைக் கலக்கியவர் புதுமைப் பித்தன், என்ற போதிலும் அந்தப் பிரச்னைகளை எழுப்பிய பாவனையிலேயே, அவரது திருஷ்டிகளும் முடிவுகளும் எதிரொலிக்கின்றன. அவற்றின் விளைவு?-ஆம்; நம்பிக்கை வரட்சி! விரக்தி!

இந்த அம்சத்தையும் நமது எழுத்தாளர்கள் நன்கு பரிசி விக்க வேண்டும். இதில் பல அபிப்பிராயங்கள் இருக்கலாம். பரவாயில்லை. விவாதங்கள் மிகவும் பயனளிக்கும். ஆளுல் ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ்ச் சிறு கதையுலகின் சாம்ராட் புதுமைப்பித்தன்,

தழைத்துச் செழித்து நின்ற தமிழிலக்கிய மறுமலர்ச்சி சகாப் தத்தில் அவரது சிருஷ்டிகள் தன்னிகரற்று விளங்குகின்றன. அவற்றைப் படித்து ரசிப்பது மட்டுமல்ல, பிரமிக்கவும் செய் கிருேம். -

பழமை எனும் மையிருட்டிலும் கூட ஒரு மின்வெட்டுப் போல் புதுமையின் ஒளிச்சிதறல்களைக் காட்டி, நெஞ்சில் அறைந்து திற்கச் செய்யும் திறமையை அவரிடம்தான் பார்க் கிருேம். -

அப்படிப்பட்ட உருவங்களுக்கு, உணர்ச்சிகளுக்கு முறை களுக்கெல்லாம் முதல்வன் புதுமைப்பித்தன். இந்த நினைவு களால் தான் அவரது நினைவு நமக்கு நிறைந்திருக்கிறது. இந்த நன்குளில் அவரது நூல்களே மேலும் அதிகமாக, ஆழ மாகப் பயின்று பயன் பெறுவோமாக! (சரஸ்வதி')

鼩 வல்லிக் கண்ணன் / 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/81&oldid=561162" இலிருந்து மீள்விக்கப்பட்டது