பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருக்கிரும் என்ருல், ஏனேயோரும் அவ்விதமே எழுதியிருக் கிருக்கள். -

இதில் சுவையான செய்தி என்னவென்ருல் மேற்கூறிய உண்மையைப் புதுமைப் பித்தனே ஒப்புக் கொண்டிருக் ( சிறுகதை என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட் டுரைகளைக் காண்க.) ஆல்ை, புதுமைப் பித்தன் மனமுவந்து ஒப்புக் கொண்டிருக்கும் இவ்வுண்மையை, புதுமைப் பித்த னுக்கு வீரவணக்கம் செலுத்துவோர் மறைத்து விடுகிருர்க்ள். புதுமைப் பித்தன் மீதுள்ள பற்று வெறியாகி விடுவதன் விளைவு இது: - -

உள்ளடக்கத்தைப் பொறுத்த மட்டில், கலேயின் நோக்கத் தைப் பொறுத்த மட்டில் புதுமைப் பித்தன், கு. ப. ரா., பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமண்யன் ஆகிய அனைவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். கலே, கலைக்காகவே! என்ப தில் அழுத்தமான கொள்கை உடையவர்கள். இவர்களுடை ய கற்பனையில், தமிழ் நடையில், பர்த்திரப் படைப்பில், கதை பின்னும் திறமையில் தனித்தன்ம்ை உண்டு; வேற்றுமைகள் உண்டு. . ; :

ஆல்ை, "யாருக்காக, இலக்கியம்? என்னும் அடிப்படைக் கேள்வியைப் போட்டால், இவர்களுடைய தனித் தன்மை மறைந்துவிடும்; (உருவர் வேற்றுமைகள் பறந்து விடும். கல மக்களின் நல்வாழ்வுக்கு அல்ல, கலே கலைக்காகவே என்னும்

விடை இவர்களிடமிருந்து ஒருமித்துக் கிளப்பும்!

எனவே உள்ளடக்கத்தைப் பொறுத்த மட்டில், புதுமைப் பித்தன், கு. ப. ரா. பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமண்யன் ஆகியோர் பழமைவாதிகள், காலத்துக்கு ஒவ்வாத கருத் தோட்டம் உடையவர்கள் என்பது தெளிவு. இவர்கள் எல் லாரிலும், புதுமைப்பித்தன் மிகப்பிடிவாதமான தனிநபர் வாதி தீவிரவாதி என்பதில் ஐயமில்லை. கலை, கலைக்காகவே' என்னும் கொள்கைக்காகப் புதுமைப்பித்தன் வீரதீர மாகப்

78 / சரஸ்வதி காலம் 卧

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/84&oldid=561165" இலிருந்து மீள்விக்கப்பட்டது