பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வாருக்கும் ஏற்பட்டிருக்கும். படிப்பவர்கள் எல்லாரும் புத்திர பாசத்தால் தவிக்க நேரிடும்.

பிள்ளைப் பேறற்ற மலடியாய் இருந்தால் கோவென்று கத

தியே விடுவாள்!

நிச்சயம் யாருக்கும் சிற்றின்பக் கிளர்ச்சி ஏற்படாது.

இப்படிப் பாத்திரத்தோடு, எழுதுபவரின் மகுே தர்மத்தோடு இழைந்து மிதந்து லயித்துச் செல்லும் ரசனைதான், உயர்ந் தது. சிறந்தது.

முலே என்ற வார்த்தையைப் படித்ததுமே நாம் கதை படிக் கிருேம் என்பதையே மறந்து சம்பந்தமில்லாத உணர்ச்சிக் கிறக்கத்துக்குப் படிப்பவர் ஏன் ஆளாக வேண்டும்? அப்படிப் பட்ட ஆபாசங்களேத் தன் மனசில் சுமந்து கொண்டிருப்பவர் கள் கதை படித்துத்தான் கெட்டுப்போக வேண்டுமா என்ன? எழுதும் நான் என் இதயத்துக்குத் திரை போட்டு எழுத முடியாது. இதயத்தை வஞ்சிக்காமல் எழுதும் தெம்பு, அந் தத் திராணியும் எனக்கு இருந்தால்தான், எந்த விஷயத் தைப் பற்றியும் எழுத முடியும்.

அப்படி எழுத முடியாத, விரும்பாத சிலர் எதையும் உணர்ச்சி பூர்வமாக எழுத மாட்டார்கள். உண்மைகளே, தீமைகளே, நன்மைகளே எதையும் திரையிட்டு மறைத்துப் பேர் பண்ணிக் கொள்ளும் காளான் இலக்கியங்களும் தான் தாட்டில் பெருத்து விடும்.

எனக்குத் தெரிந்த உண்மைகளேயும், எனக்கு ஏற்படும் உணர்ச்சிகளேயும், என்னுடைய இதயத்தையும், என்னு டைய ரசனேயையும் கொன்று விட்டு நான் என்னத்தை எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது?

பெண்’ என்று சொன்னதும் ஆண்களும், ஆண் என்று சொன்னதும் பெண்களும் தம் மனத்தில் அவர்களே நிர்வ்ான

92 சரஸ்வதி காலம் أسماً

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/98&oldid=561179" இலிருந்து மீள்விக்கப்பட்டது