பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்கி ரசிக்கும் ஆபாசமனம் படைத்து விட்டால், அப்புறம் உலகத்தில் ஆண் பெண் என்ற வார்த்தைகளே ஆபாச மாகத் தான் மாறிவிடும்.

ஆபாசம் வார்த்தையிலா இருக்கிறது? அப்படியானுல், வலி மை சேர்ப்பது தாய் முலேப்பாலடா உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலேயினில் உணர்வெ னும் பால் என்ற பாரதியின் கவிதையிலுள்ள முலே என்ற பதத்திற்கு நாம் முகம் சுளிக்க வேண்டுமா?

தன் சொந்தக் குழந்தை இறந்த சோகத்தில் கவிஞன் பாடு கிருன்; பம்புமலேக் காட்டில் பாயாமல் என் மனைவி கும்ப முலைக்காட்டில் குதித்தோடும் மான்குட்டி’ என்று கூறும் போது யோகியார் தனது மனைவியைப் பற்றி ஆபாசத்தை வெளியிடுகிருர் என்று கொள்வது விவேகமா? ஆகையினுல் எந்தக் கதையையும் முழுக்க முழுக்க அமைதியாகப் படித்து அதன் முழுத் தன்மையையும் கிரகித்துச் சுவைக்க வேண் டும் என்று என் மதிப்பிற்குரிய வாசக சகோதரியைக் கேட் டுக் கொள்கிறேன்.

  • நான் கதை எழுதிய பின் நான் எழுதினேன்” என்ற தினைப்பை ஒதுக்கி வைத்து விட்டுக் கதையை மனம் விட் டுப் படித்து ரசிக்கும் முதல் வாசகன் நான்தான்.

அதில் குறை இருந்தால் கனன்று சீறி விழுந்து அதை ஒதுக்கி விட்டு வேறு கதை எழுதத் துண்டும் முதல் விமர் சகனும் நான்தான்.

என் இதயத்திற்குத் துரோகம் செய்து விட்டு உங்களிடம் தான் பாராட்டுப் பெற முடியுமா? முடிந்தால், அது சரியா? , ஜெயகாந்தனின் இக்கட்டுரையும் விதம் விதமான எதிரெ லிகளைக் கிளப்பின,

ξΤ. - வல்லிக்கண்ணன் , 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/99&oldid=561180" இலிருந்து மீள்விக்கப்பட்டது