பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சரிந்த சாம்ராஜ்யங்கள்


னும் புஷ்யமித்திரன் செய்ததைப்போல ஒரு அஸ்வமேத யாகம் செய்திருக்கின்றான். இவன் மகன் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் ஆகியோர்களால் வளர்க்கப்பட்ட ஆரியத்தை எவராலும் அழிக்க முடியவில்லை. ஆனால் இவர்களால் புத்த மதத்தை அழிக்க முடிந்தது. எந்த அளவுக்கு அழிந்தது. எந்த புத்தகயாவில் அசோகன், சக்கரம் சுழன்று கொண்டிருந்ததோ, எந்த புத்தகயாவில் சித்தார்த்தன் பேருண்மையைக் கண்டானோ, எந்த புத்தகயாவில் அரசன் ஆணைக்கு அடிபணிய ஆரியர்கள் கைகட்டி நின்றார்களோ, எந்த புத்தகயாவில் போதி மரத்தின் நிழல் படர்ந்திருந்ததோ, எந்த புத்தகயாவில் மக்கள் அனைவரும் சமம், மகேசுவரனைக் காட்டி மக்களை ஏமாற்றுவது மாபெரிய துரோகம் என்று அறிவிக்கப்பட்டதோ, எந்த புத்தகயாவில் கோசலாதிபதி சுத்தோதனன் கொடி பறந்து கொண்டிருந்ததோ, எந்த புத்தகயாவில் வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது என்பதைக் காட்டும்வண்ணம் புத்த விக்கிரகத்துக்கு முன்னால் வேம்பும் மாவும் தளிர்விட்டு நிழல் தந்து நின்று கொண்டிருந்ததோ அந்த புத்தகயாவில் ஒரு மண்டபம் எழுப்ப கேவலம் ஒரு ஆரிய மன்னன் சமுத்ரகுப்தனிடம் சிங்கள அரசன் மேகவர்னன் உரிமைக் கேட்க கைநீட்டவேண்டி வந்தது.

மனுநீதியும் பகவத் கீதையும் ஆட்சி செய்யத் தொடங்கிய காலம் இதுதான். பஞ்சதந்திரக் கதைகளை எழுதி மக்கள்முன் குவித்ததும் இதே காலத்தில்தான்.

திராவிடர் வீழ்ந்தனர்

இதுவரை ஆரியத்தைப் பலமாக எதிர்த்து வந்த திராவிடர்கள், வடக்கே எழுப்பிய பெரிய பெரிய படை