பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

69


முழக்கம் இப்போது கேட்கத் தொடங்கியது. நான் மட்டும் உண்டாக்கியதல்ல இந்த மாபெரும் சாம்ராஜ்யம், பாபரின் படைவன்மையால், ஹூமாயூனின் கூர் மதியால், அக்பரின் அன்பால், ஷாஜஹானின் மயிலாசனத்தின் ஒளியால், தோன்றிய சாம்ராஜ்யம் இது, என்று கம்பீர ஒலி எழுப்பினான் ஒளரங்கசீப்.

பாபரின் படை வன்மையால் தோன்றியதுதான், பாபரின் படை வன்மையைவிட சிவாஜியின் வாள் மட்டுமே, வன்மைபெற்று விளங்கியது. ஹூமாயூனின் கூர்மதியைவிட சிவாஜியின் தளகர்த்தர்கள் மதியூகம் படைத்தவர்கள், அக்பரின் அன்புள்ளம், இந்துக்களுக்கு அளித்த மன அமைதியைவிட, சிவாஜியின் புன்னகை இந்துக்கள் மனதிலே மனமாற்றம் ஏற்படச் செய்துவிட்டது. ஒளரங்கசீப் மாபெரும் தளகர்த்தன் என்றாலும், அவன் உள்ளம் நிரம்பி வழிந்த மதவெறி அவன் வாளின் கூர் முனையை மழுங்கச் செய்துவிட்டது. தக்காணத்திலே கலகம். அடக்க முடியவில்லை. வட மேற்கு எல்லையில் எதிர்ப்பு உருவாகியது. அதைச் சமாளிக்க முடியவில்லை. வங்கத்திலே மொகலாயப் படையை வஞ்சம் தீர்க்க, புதிய படை ஒன்று தயாரா கிறது. ஆனால் அதை அடக்க ஒளரங்கசீப்பின் படை வலிவை இழந்துவிட்டது.

இருநூறு ஆண்டுகளாக இந்திய மண்ணிலே வாழ்ந்த மொகலாயர்களின் வீரம் மறைந்துபோயிற்று. காபூல் களத்திலே அவர்கள் காட்டிய வீரம், கஜினியின் பின்னே அணிவகுத்து நின்ற போர் படையின் தீரம் செங்கிஸ்கானின் விழி அசைத்தால் இந்த உலகையே வென்று வருகிறோம் என்று மார் தட்டிய மொகலாயப் படையின் தைர்யம் எங்கே ? எங்கே? என்று கேட்