பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

79


திறனையும் இவர்கள் இனத்தின் வீரத்தையும் துணையாகப் பெற்றார்கள். மாற்றானின் படையெடுப்பினின்று தப்பினார்கள் மொகலாயர்கள். அவர்கள் தோற்றுவித்த சாம்ராஜ்யம் அழிந்து போனது ஏன் என்று டில்லி செங்கோட்டையின் முன் நின்று தாஜ்மஹாலின் வாயிலின் நின்று இன்றைக்கும் சரித்திர மாணவர்கள் கேட்டுக் கொண்டு நிற்கின்றனர்.

மாவீரன் என்று பெயர் பெற்றான், மகாராஷ்டிரம் என்ற பெயரை சாம்ராஜ்யங்களில் வரிசையில் சேர்த்தான். யாராலும் எதிர்க்க முடியாதவன், எதிர்ப்புக்கே அஞ்சாதவன் என்று பெயர் பெற்ற ஔரங்கசீப்பை ஆட்டிப் படைத்தான். அழிந்தே போய்விட்டது அழிக்கப்பட்டு விட்டது என்று சொல்லப்பட்ட இந்து மதத்தை மீண்டும் தலை நிமிரச் செய்தான். யாராலும் வெல்லமுடியாத கோட்டைகளை வென்றான் சிவாஜி. ஆனால் அவன் கட்டிக்காத்த சாம்ராஜ்யம் ஏன் அழிந்து போயிற்று என்ற கேள்விக்குறியுடன் மகாராஷ்டிர மண்டலத்தில் இடிந்தும் இடியாமலும் காட்சியளிக்கும் வீரசிவாஜியின் கோட்டைகள் நம் முன்னே காட்சியளிக்கின்றன.

இப்படிக் காட்சியளிக்கும் சரிந்த சாம்ராஜ்யங்களின் சின்னங்களைப் பார்த்து நாமும் கேட்கிறோம் என் இவைகள் அழிந்துபோயின. யார் இவைகளின் அழிவுக்கு காரணம்? எந்த சக்தி இவைகளை சரிந்து போகச் செய்தது. என்ற சந்தேக வினாவைக் கேட்ட வண்ணமிருக்கின்றனர்.