பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

sia siouë stëgsossar

உயிர்க ளெல்லாம் உணர்வு பாழாகிப் பொருள் வழக்கு செவித்தொளை தூர்த்து அறிவிழந்த வறந்தலை உலகத்து அரும்பாடு சிறக்கச் சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலையோர் இளவள ஞாயிறு தோன்றிய தென்ன நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன்.

பெள-சாத்தனார்

இருட்பார வினைநீக்கி

எவ்வுயிர்க்கும் காவலென அருட்பாரம் தனிசுமந்த

அன்றுமுதல் இன்றளவும் மதுவொன்று மலரடிக்கீழ்

வந்தடைந்தோர் யாவர்க்கும் பொதுவன்றி நினக்குரித்தோ

புண்ணிய! நின்திருமேனி. பெள

அருள் வீற்றிருந்த திருநிழற் போதி முழுதுணர் முனிவ, நிற்பரவுதும் தொழுதக ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்து ஒங்குநீர் உலகிடை யாவரும் - நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே. பெள

பூசை

காயமே கோயி லாக

, கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக

மனமணி இலிங்க மாக حصی நேயமே நெய்யும் பாலா

நிறையநீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப்

போற்றவிக் காட்டி னோமே