பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

șY

சர்வ சமயச் சிந்தனைகள் * பொறுமை

தீய சொற்களைப் பொறுத்துக்கொள். சினம் கொள்ப வரிடம் சினம் கொள்ளாதே. தீமை செய்பவர்க்குத் தீமை செய்யாதே.

சினத்தைப் பொறுமையாலும், தீமையை நன்மை யாலும், பொய்யை மெய்யாலும் வெல்க; பொறுமை யே பொன்றாமையை அளிப்பதாகும்.

-மகாபாரதம்

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.

பொறுத்தல் இறப்பின் என்றும், அதனை மறத்தல் அதனினும் நன்று. கறுத்தின்னா செய்தவக் கண்ணும், மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர்நான நன்னயம் செய்து விடல். - வள்ளுவர்

பிறர் செய்யும் தீமைகளை மனத்தில் பகைமையின்றிப் பொறுத்துக் கொள்பவனே பக்தி செலுத்தத் தக்க சான்றோன் ஆவான். பெள

மன்னிப்பு வேண்டுபவனுக்கு மன்னிப்புத் தருக, தராத வன் தவறு செய்பவன். பெள

தன்னை யொருவன் இகழ்ந்துரைப்பின் தான்வனைப் பின்னை யுரையாப் பெருமையோன் - முன்னை வினைப் பயனால் ஆயிற்றால் என்ற தன்கண்

மெய்ம்மை நினைத்தொழிய நெஞ்சினோய் இல்.

ச - அறநெறிச்சாரம்