பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

.

சர்வ சமயச் சிந்தனைகள்

உண்மையைக் காண முயல், உண்மையைக் கண்டு அதற்குத் தக நில். - &F

பொய் பேசற்க. பிறரைப் பொய் பேசச் செய்யற்க. பிறர் பொய் பேச ஏற்றுக்கொள்ளற்க. &F

வாழ்வு வாழ்வதெல்லாம் மக்களுக்கு நன்மையும் இன்பமும் தேடுவதற்கே. பெள இறந்தும் இறவாமல் இருப்பவன் நீண்ட நாள் வாழ்பவன். தா தன்னுடைய வாழ்வுக்காக எதுவும் செய்யாதவனே வாழ்வின் பயனை அறிந்தவன். தா நாம் செய்யும் செயல்களுக்கேற்ற வண்ணமே வாழ் வும் தாழ்வும் உண்டாகும். தா

விமோசனம்

வாழ்வைக் காக்க விரும்புவோர் இழக்கவேண்டும். என் பொருட்டு வாழ்வை இழப்போர் வாழ்வைப் பாதுகாப் பவர். உலகம் முழுவதையும் பெற்றும் ஆன்மாவை

இழந்துவிட்டால் யாது பயன்? கி

வீரன்

பகைவனை நண்பனாகச் செய்துகொள்ள வல்லவனே வீரன். - GT

வெற்றி

நீன்ரப்போல் மென்மையுடையது வேறு கிடையாது. ஆயினும் அதுவே கடினமானவற்றைக் கரைத்து விடும். அதுபோல் மெலியார் வலியாரை வெல்வர். இதை எல்லோரும் அறிவர், ஆயினும் யாரும் பயில் வதில்லை. தா