பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Yor

சர்வ சமயச் சிந்தனைகள்

அகிம்சை எல்லாப் பிராணிகளும் துன்பத்தை வெறுக்கின்றன, அதனால் எதையும் கொல்லலாகாது. கொல்லாமையே அறிவின் தெளிந்த சாரமாகும் ச

ஆசையின்மையே அகிம்சை, ஆசையுடைமையே கிம்சை, இதுவே சமண மதத்தின் சாரம். &F

பிறரைக் கொல்லும் பிராணிகளையும் கொல்லற்க. ச

கொல்லலாம் என்று கூறுபவரினும் மத நம்பிக்கை

யில்லாதவர் சாலச் சிறந்தவர். 夺

அச்சம் நான் ஒரு மனிதன், நான் ஏன் மனிதர்களைக் கண்டு அஞ்சவேண்டும்? 等 அச்சத்துடனும் பொய்யுடனும் வாழ்தல் மரணத்தினும் தீயதாகும். & இறைவன் என்னுடன் இருக்கும்போது எனக்கு அச்சம் ஏது? கி

அன்புள்ள இடத்தில் அச்சமில்லை, தூய அன்பு அச்சத்த்ைத் துரத்திவிட வல்லது. கி இதயத்தில் தூய்மை உடையவனிடம் எள்ளளவு அச்சமும் நிற்கமாட்டாது. கடவுள் நாமத்தில் நம்பிக்கை யுடையவனே அச்சமில்லாதவன். கி

அச்சமற்ற கடவுளைத் தியானிப்பவரிடமிருந்து அச்சம் அனைத்தும் அகன்றுவிடும். கி