பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 25

இருளே உலகத்து இயற்கை, இருளறுக்கும் கைவிளக்கே கற்ற அறிவுடைமை, கைவிளக்கின்

நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை, நெய்பயந்த

பால்போல் ஒழுக்கத்தவரே பரிவிலா மேலுலகம் எய்து பவர். அறநெறிச்சாரம் ச

பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல், யாதும் அறங்கூற வேண்டா அவற்கு. நாலடியார் ச

நல்ல நம்பிக்கையின்றி நல்ல அறிவு உண்டாகாது; நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கம் உண்டாகாது. GF

ஆசைகளை அகற்றினால் மட்டுமே அறநெறியில் நிற்க இயலும். & அறமும் உயிரும் - இரண்டையும் போற்றுவேன், ஆனால் இரண்டையும் பெற இயலாதாயின் உயிரைத் துறந்துவிட்டு அறத்தைக் காப்பேன். ö சகல பிராணிகளிடத்திலும் இரக்கம் கொள்ளுதல், சகல மனிதரிடத்திலும் அன்பு கொள்ளுதல், தன்னல எண் ணங்களுக்கு இடந் தராதிருத்தல், இவையே அறத்தின் இலக்கணம். &5

உனக்கு எதை விரும்பமாட்டாயோ அதைப் பிறர்க்கும்

விரும்பாதே. ᏭᏖ

உண்மையாக நடப்பதே அறநெறியின் உண்மையான இலட்சணம். &S

உலகத்தில் உள்ள வழிகள் இரண்டே, அன்பு கொள் வது, அன்பு செய்யாதிருப்பது, எல்லாம் இதில் அடங்கும். &S