பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

sie suoué &ésosessi

உன்னிடமுள்ள நற்குணத்தை நான் மறைத்துவிடத் துணியேன். என்னிடமுள்ள தீய குணத்தை நான் மன்னித்துவிடத் துணியேன். è$

உண்மையான அறம் பிறரிடம் அன்பு கொள்வதே; உண்மையான அறிவு பிறரை அறிந்து கொள்வதே. க

அறநெறியில் பிறழா வண்ணம் மூன்று ஆண்டு காலம் நடப்பவர் இன்பம் காணாதிருக்க முடியாது. &S இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும்; நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும்; நன்மை தீமை தெரியும் நெஞ்சில் மெய்யுணர்வு பிறக்கும்; ஆணவம் இல்லாத மனிதர் கிடையார். &

மனித குணம் அறத்தை நாடுவது தண்ணிர் தாழ் நிலம் நாடுவதை ஒக்கும். கீழ் நோக்கி ஓடாத நீர் இல்லாதது போல் அறம் நோக்கும் இயல்பு இல்லாத மனிதர் கிடையார். &

தன்னை அறப் பெறுவதே தலையாய அறம். தன் னலத்தை ஒரு நாள் காலம் துறந்தாலும் போதும், சகமனைத்தும் புகழும். &

அறம் என்பது கைக்கு அகப்படாத ஒன்றா? இல்லை, அண்மையிலேயே உளது. & அறம் தனித்து வாழாது, அநேகர் அதைச் சூழ்ந்து கொள்வர். ஆ

அறநெறி நிற்பவரே பிறரிடம் உண்மையான அன்பு காட்ட முடியும். &

அறம் என்பது யாது? உண்மையான சிக்கெனப் பிடித் தல், இறைவனிடம் சரண் புகுதல், தன்னை அறவே ஒழித்தல், எப்போதும் மகிழ்ந்திருத்தல், இறைவனைச் சிக்கெனப் பிடித்தல். கி