பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 33

șY

Yor

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. - திருமூலர்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை. - வள்ளுவர்

அறநெறியில் நிற்பது ஒழுக்கம், அன்பின் மூலமாகவே அதைப் பெற முடியும், அன்பே மனித குலத்தின் அடிநிலை இயல்பு. &

வாழ்க்கையில் வழிகாட்டும் சொல் ஒன்று உளதா? அனுதாபம் அல்லவா அச் சொல்? ஆம் உனக்கு நேர விரும்பாததைப் பிறர்க்கு நேர விரும்பாதே. &S

மனிதப் பண்பைக் காண்பது அன்பு ஒன்றிலேயே. க

அன்பு உடையவர்க்குப் பிறர் குறைகள் புலனாகா, அன்பு இல்லாதவர்க்குப் பிறர் குணங்கள் புலனாகா, ஆம் தந்தைக்குத் தனயன் தவறு தெரிய மாட்டாது. க

அன்பு என்பது யாது? மனிதர்களை நேசிப்பதே. அறிவு என்பது யாது? மனிதர்களைத் தெரிவதே. க

தண்ணிர் நெருப்பை அவித்து விடுவதுபோல் அன்பு வேடத்தை அவித்துவிடும், ஆனால் இக் காலத்தில் அன்பு வழி நிற்போர் எரியும் மரத்த்ை அவிக்க இரண்டு கரண்டி நீரைத் தெளிப்பவராவார். நெருப்பு அவியா ததைக் கண்டு நீரால் நெருப்பை அவிக்க முடியாது

எனறு கூறுவா. &$