பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

女

sisu siouë stëzanarssit

எதையும் தமது என்று கூறாதவர் இன்பம் கண்டஐந்,

Ll

இன்பமும் துன்பமும் எப்போதும் மனிதன் தான்ாகத் தேடிக்கொள்வனவே, புறத்தேயிருந்து வருவனவல்ல.

&$

உண்ணச் சோறும், பருக நீரும், தலைவைத்துப் படுக்க முழங்கையும் உடையேன், எனக்கு யாதும் குறை வில்லை இன்பமே எந்நாளும். &Ꮛ

துய்க்கத் துய்க்கத் தேயாத இன்பம் பிறர்க்கு நன்மை செய்வதால் உண்டாகும் இன்பம் ஒன்றே. &S

இன்பமும் துன்பமும் ஊழால் வருவனவல்ல, நாமாகத் தேடிக்கொள்வனவே. ᏑᏋ

இன்பம் பெறுவதற்கான மூன்று இரகசியங்கள் இவை : தீமையைப் பாராதிருப்பது, தீமையைக் கேளாதிருப் பது, தீமையைச் செய்யாதிருப்பது. பெள சான்றோர் இன்பத்தைக் காண்பது தங்கள் இதயத் திலேயே, அல்லாதோர் காண்பது அயல் விஷயங் களிலேயே. Ꮬ

இன்பமும் துன்பமும் வருவதற்கு வேறு வேறு வழிகள் கிடையா, அவை நன்மையையும் தீமையையும் நிழல்போல் தொடர்ந்து வருவன. தா

இன்பம் அனுபவிப்பதாகத் தெரியாத இன்பமே பரிபூரணமான இன்பம்; புகழப்படுவதாகத் தெரியாத புகழே உண்மையான புகழ். தா

இதயத்தில் அமைதி உண்டாவதே இன்பம், இதய நிறைவு இல்லாமையே துன்பம். தா

இன்பம் இறகினும் மெல்லியது, இருந்தாலும் அதைத் தாங்க யாரும் அறியார். துன்பம் மண்ணினும் பளு வானது, ஆயினும் அது வராமல் காக்க யாரும் அறியார். தா