பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 49

.

உள்ளத்தில் உண்மையுடையார் தோல்வி அறியார், பிரார்த்தனை செய்தும் தோல்விகண்டால் பிரார்த்தனை உண்மையுடன் செய்யவில்லை என்று உணர்ந்து கொள். டி - يع .

உள்ளத்தில் உண்மை உடையோர் அனைவரும் உடன் பிறந்தவரே. உண்மையாக ஒழுகுவதே கடவுளையும் மனிதனை யும் ஒன்றாக இணைப்பதாகும். இதயத்தில் உண்மை யுடையவன் செய்யும் பிரார்த் தனையையே இறைவன் கேட்டருள்வான். உள்ளத்தில் உண்மை யுடைமையே அறங்களுள் தலையாயது, அது உலகில் சர்வ சகோதரத்துவத்தை உண்டாக்க வல்லது. சி

உண்மையுள்ள உள்ளமே அறிவின் பிறப்பிடம். சி ஆயிரக்கணக்கான பொய் பேசுவோரினும் உண்மை பேசும் ஒருவனே சிறந்தவன். ஜா பொய் பேசுவோரைக் கண்டு கடவுள் வருந்துவர்,

உண்மை பேசுவோரே அவருக்கு ஆனந்தம் தருவர்.இ

உண்மை பளுவானது அதனால்தான்் அதைச் சுமப்

பவர் சிலராக இருக்கின்றனர்.

உலக வியவகாரங்களில் உண்மையாக நடந்து கொண் டாயா என்பதே இறந்தபின் முதன் முதலாக இறைவன் கேட்கும் கேள்வி. இ. உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உண்மை உங் களுக்குச் சுதந்திரம் தரும். கி

கடவுள் உண்மையாகவே இருக்கிறார். ஆசை வழிச்

செல்லாதே, உண்மையினின்றும் பிறழாதே. இ