பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ነ¥

são souš stěžaosassit செய்யவேண்டிய கடமை சேய்மையில் இல்லை, அணித்தே உளது. &

செய்ய வேண்டிய கடமை அண்மையில் இருக்க மக்கள் சேய்மையிலேயே தேடுகின்றனர்.

எல்லோரிடமும் நட்புக்கொள்க, அதுவே உன் இயல்பு. அவரை அறநெறியில் நிற்கச் செய்க, அதுவே உன் அறிவு. அவரை உன்னைப் போலவே கருதுக, அதுவே உன் மதம்..அவரால் இன்பம் அடைவாய், அதுவே உன் ஆன்மா. Ɛgir கடவுளை அஞ்சி அவர் கட்டளைகளை நிறைவேற்று வாய், இதில் மனிதனுடைய கடமை முழுவதும் அடங்கும். GT

இம்மையில் கடமை செய்வோர் மறுமையில் கதி அடைவாா. GT

கடவுள்

கடவுள் எத்தனை பேர்? ஒருவரே, அவரை அறிவேன், அவரே ஆன்மாவின் மூலமாவர். -உபநிடதம்

என்னைவிட உயர்ந்ததொன்றுமில்லை. முத்துக்கள் நூலில் கோத்துள்ளதுபோல் பிரபஞ்சம் முழுவதும் என்னிடமே யுளது. -பகவத்கீதை

எல்லாப் பொருள்களிலும் ஒரு பொருள் உளது, அதுவே ஒருருவைப் பலவாக உண்டாக்குகின்றது. அப்பொருளைத் தங்கள் அகத்தே காண்பவரே அழி யாத இன்பத்தை பெறுவர். -உபநிடதம்

வஞ்சகமின்றி நியாயமாய் நடந்தால், எந்தக் கடவுளுக் குப் பிரார்த்தனை செய்ய வேண்டும்? &

நான் யார்? அன்பே யாவேன், உண்மையே என் உடல். பெள

三垒