பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

சர்வ சமயச் சிந்தனைகள் கடவுள நாமம்

கடவுள் நாமமே அச்சக் கடலைக் கடக்கும் தோணி, இருளை யோட்டும் சூரியன், துன்பத்தை மறக்கச் செய்யும் நகை. w கடவுள் நாமமே மனிதருடைய நோய்கள் அனைத்துக் குமான அமிர்த சஞ்சீவியாகும்.

கடவுள் நாமத்தைக் கேட்டால் உண்மை, திருப்தி, அறிவு மூன்றும் உள்ளத்தில் உதயமாகும். இ

கடவுள் துதி

ஆண்டவனே! அஹரை மஜ்தா! நீர் எனக்கு அருளிய வண்ணம் நான் நன்மை உண்டாகுமாறு எண்ணிய எண்ணங்களுடனும், சொன்ன சொற்களுடனும், செய்த செயல்களுடனும் உம்மிடம் வருவேன். &m.

ஆண்டவனே அஹுர மஜ்தா ஆற்றலும் அருளும் நிறைந்தவரே, எங்களுக்கு உதவி செய்ய அறவோரை அனுப்பும், எங்களுக்குத் தீமை செய்யாதிருக்குமாறு மறவோரைத் தடுத்தருளும். ஜா

ஒ அஹாரா! அறிந்தவன் செய்யும் கடமை இது. அதை நான் செய்வேன். தூய மனதே தலையாய பேறு, உண்மை நெறியில் நிற்பவரே அதைப் பெறுவார். எல்லோர்க்கும் இந்த உண்மையைக் கூறுவதே எனக்கு இன்பமாகும். ஜா

ஒ அஹாரா! நான் உம்மை ஆதி அந்தமாக, அனைத்திலும் சிறந்ததாக, நற்சிந்தையின் தந்தையாக, உண்மையை உண்டாக்கியவராக, இதயத்தைப் சோ திப்பவராக என்று கருதினேனோ அன்றே உம் முடைய உண்மையை உணர்ந்தேன். என்னுடைய இதயத்தை உம்முடைய கோயிலாக ஆக்கினேன். ஜா