பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 69 கிறிஸ்து

  • அன்பு மயமே கருணை ஆனந்த வாரியே,

அருள்மொழி மழைக் கொண்டலே ஆருயிர்க் குயிரான அமிர்த சஞ்சீவியே, அடியர் இதயாம் பரத்தில் இன்புற உதித்திலகு மெஞ்ஞான பானுவே, ஏத்தரும் சுகுண நிதியே, இதரசம யாதீத நிலையமே, வானிழிந்து இம்பர் வரு சீவ நதியே, - மன்பதை புரக்க நடு நின்றோங்கு ரட்சணிய மாமேருவே, என்றுநின் வன்புகழ் வழுத்திமெய் அன்பினொடு சிந்தைபர வசமாகி ஆவி அனல்கொண்டு என்புருகி ஆனந்த பாஷ்பஞ் சொரிந்து நின்று ஏத்தவருள் செய்வ தென்றோ? ஏகநாயக சருவ லோக நாயக கிறிஸ்து e இயேசு நாயக ஸ்வாமியே. - கிருஷ்ணப்பிள்ளை

குரு * உண்மையான குரு அன்பு செய்யக் கற்றுக்கொடுத்து

உத்தமனைச் சந்திக்குமாறு செய்கின்றார்.

  • குரு உடையவன் கடவுளைக் காண்டான். அறுபத் தெட்டுத் தீர்த்தங்களிலும் ஆடியவனாவான். துன் பங்கள் எல்லாம் இன்பங்களாக ஆகும். குரு இல்லாத வனுக்கு சாந்தியில்லை.

ல் குருவுக்குச் சேவை செய்பவன் அறநெறியைக் காண் பான். குருவின் துணையின்றி அதைக் காண முடியாது.

சி கொல்லாமை 女 அறவினை யாதெனில் கொல்லாமை, கோறல்

பிறவினை எல்லாம் தரும் திருவள்ளுவர்

  • தன்னுயிர் நீர்ப்பினும்செய்யற்க, தான்்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை திருவள்ளுவர்