பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னோட்டம்

எந்தெந்தக்காலத்தில் எந்தெந்தச்சமுதாயம் கெடுகின்றனவோ அந்தத்தந்தக் காலத்தில் அவ்வச் சமுதாயத்தின் கேட்டினை நீக்கி மக்களை நல்வழிப்படுத்தச்சான்றோர்கள் தோன்றுகின்றனர். அவரவர் தம் கொள்கைகளைக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றவர்கள் அவரவர்முன்னோடிகளின் பெயரால் சமயத்தைப் படைத்தனர்.

நன்மைக்குத் தோற்றுவித்தவை தீமையின் உச்சநிலைக்குச் சென்று பகையுணர்ச்சியால் மக்களை மதவெறியர்கள் ஆக்கின. அறிவியலும் அறவுணர்வும் வளர வளர மதம் மக்களை மாய்க்கும் அபின்'நிலைமாறிஇருபதாம் நூற்றாண்டின்தொடக்கத்தில் ஒவ்வொரு சமயமும் ஒரு வாழ்வியக்க நெறி என்று ஓரளவு உணரப்பட்டது. உணர்த்தவும் பட்டது.

இந் நல்லுணர்வுக்கு இருபதாம் நூற்றாண்டுப் பேரறிஞர்கள் பாடுபட்டனர். அதன் விளைவுதான்் மதநல்லிணக்கம். உறுதியான உள்ளம் இருந்தால் எவ்வளவு உறுதியற்ற ஐயத்திற்கிடமான செய்திகள் கூறப்பட்டாலும் அதிலிருந்து உண்மையை - உறுதியை எடுத்துக் கொள்ளும் நமது உள் மனத்தின் நிலைக்கு ஏற்ற செய்தியையே நாம் எடுத்துக் கொள்கிறோம். எதுவும் நம்மீது திணிக்கப்படுவதில்லை. நம் வாழ்வு ஓங்கநமது மனத்துடன்இணையும் ஏற்றமிகு கருத்துகளையே நாம் நமக்குள் வரவேற்று ஏற்றுக் கொள்கிறோம். அவ்வகையில் தொகுக்கப்பட்டதே சர்வ சமயச் சிந்தனைகள்