பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

.

சர்வ சமயச் சிந்தனைகள் செருககு

செருககு உடையவன் பக்தி செயய முடியாது. இ இதயத்திலிருந்து செருக்கை நீக்கு, இறைவன் சன்னதி திறக்கும். இ கடவுளை அறிந்தவனே உயர்ந்தவன், ஆனால் அவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவே செய்வான். இ சாதிச் செருககை விட்டுவிடத் துணிபவனே ஞானி யாவான். பெள

அறிவில்லாதவனால் கூடப் பயன் உண்டு, அறிவிருந் தும் ஆணவம் உடையவனால் யாதொரு பயனும் உண்டாகாது.பெள

செல்வம்

செல்வத்திடம் வைக்கும் ஆசையே தீமைகள் அனைத் திற்கும் வேர். கவனமாக நடந்துகொள். வெஃகுதலுக்கு இடங் கொடுத்துவிடாதே. வாழ்வு செல்வப் பொருள்களைத் தேடித் குவிப்பதில் அடங்கவிலலை. கி

உடல, பொருள், ஆவி மூன்றையும் கடவுள் நெறி யைப் பரவிச் செய்வதற்காகப் பயன்படுத்துக. இ செலவமும் மக்களும் தெய்வத்தை மறக்கச் செய்து விடாதபடி காத்துக் கொள். இ

கடவுளுடைய கருணையும் மன்னிப்பும் பிற செல்வங் கள் அனைத்தினும் சிறந்தவை. இ செல்வம் என்பது சேர்க்கும் பொருளன்று, தேவையற் றிருத்தலே. இ

கடவுள் பக்திக்கு அடுத்தபடியில் முக்கியமான கடமை யாயிருப்பது அறவழியில் செல்வம் தேடுவதாகும். இ