பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

.

சர்வ சமயச் சிந்தனைகள் கடுகளவாகவேனும் மாசுகளை அகற்றிக் கொண்டே யிருப்பர். பெள

பிறர் குற்றம் காண்பது எளிது, தன் குற்றம் காண்பது கடினம், மக்கள் பிறர் குற்றங்களையே நாடுவர். பெள உள்ளும் புறமும் ஒட்டையில்லாத அரனே அரண் எனத் தகும். அதுபோல் ஆக்கிக் கொள் உன்னுடைய உள்ளத்தையும். பெள இதயத்துக்குள் தீய எண்ணங்கள் வராமல் கவனித்துக் கொள். அவை உன்னை அறியாமலே வந்து புகுந்து விடும் தன்மையுடையன. தீய எண்ணங்கட்கு இடங் கொடாதவனே இன்பம் காண்பான். பெள

மன்னிப்புக் கேட்பதன் மூலம் அன்பு செய்யும் குணம் உண்டாகும். அக் குணத்தின் மூலம் அச்சம் அகலும், தூய்மை பெருகும். نیr உண்மையே உள்ளத் துய்மையை உண்டாக்கும், உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. & சடங்குகள் மனிதன் சிருட்டித்தவை. துய்மை உடையவர் கடவுளரே. தா இன்று இங்குத் தங்குவேன். என்னைத் துய்மை செய்து கொண்டு இறைவனிடம் நாளைப் போவேன்சி உள்ளத்தில் உண்மையில்லாதவர்கள் செய்யும் ஆராதனைகளை நான் ஏற்றுக் கொள்வேன். சி நன்மை செய்வதே தூய்மையாய் இருப்பது; தீமை செய்வதே தூய்மையின்றி இருப்பது. தீய செயல்கள் மாசுடையன, ஆதலால் அவற்றைக் கடவுளர் வெறுப்பர். ع

தூய்மை என்பது யாது? உடம்பை நீரால் கழுவுவ

தன்று. அறநெறியில் நிற்பதே. தீட்டு என்பது மறச் செயலே. சி