பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வ சமயச் சிந்தனைகள் ஏசுபவனை ஏசுபவன் இழிந்தவன்; ஏசுபவனை ஏசாதவன் இரண்டுவித வெற்றி பெறுபவன்; அவன் தன்னுடைய நன்மையையும் ஏசுபவனுடைய நன்மை யையும் தேடிவிடுகின்றான். பெள சினங் கொள்பவன் சிந்தையை அறிந்து சாந்தம் கொள்பவன் தன்னையும் அவனையும் குணப் படுத்தும் மருத்துவனாவான். பெள நன்மை செய்யும் குணத்தை இழப்பதற்குரிய வழி நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு நன்மை செய்வதே. &; பிறர் அறியும்படி செய்யும் நன்மை உண்மையான நன்மையாகாது. பிறர் அறியா வண்ணம் செய்யும் தீமையே உண்மையான தீமையாகும். &S சிறியோர் சிறு நன்மைகளால் பலனில்லை என்று எண்ணி அவற்றைச் செய்யார். சிறு தீமைகள் தீமை செய்யா என்று எண்ணி அவற்றைச் செய்யாதிரார். இவ்வாறு அவர் தீமை பெருகி மன்னிக்க முடியாத அளவுக்கு வந்துவிடும். &Ꮛ பிறர் பெறும் நலத்தை உன்னுடைய நலமாக எண்ணு, பிறர் பெறும் தீமையை நீ பெற்ற தீமையாகக் கருதுதா

கடவுள் ஒருவனுக்கு நன்மை உண்டாக்க விரும்பினால் அவன் எத்தகையவன் என்பதையே கருதார். எதைச் செய்தான்் என்பதைக் கருதார். * தா

கடவுளுக்கு அஞ்சி பாவம் செய்யாதிருத்தல், வாழ் விலும் தாழ்விலும் வாய்மை தவறாதிருத்தல், செல் வத்திலும் வறுமையிலும் நடுநிலைமையில் நிற்றல், இம் மூன்றும் வீடளிப்பன. - இ

உலக சுகத்தில் ஆழ்தல், உலுத்தனாயிருத்தல், தற் பெருமை கொள்ளுதல் இம் மூன்றும் நாசம் தருவன.இ