பக்கம்:சர்வ சமயச் சிந்தனைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் த. கோவேந்தன் 95

.

அறச்செயல்கள் செய்யாதவர்க்கு கதி மோட்சம் கிடையாது. இ

வீடில்லாதவர்க்கு வீடளிப்போர், தாழ்ந்தோரை உயர்த்துவோர், பிறர் குறைகளைத் தீர்ப்போர், இவரை அல்லும் பகலும் மறவேன் என்று இறைவன் அருள் கின்றான். இ

நன்மை செய்தல் பிறர் நன்மை செய்தால் நன்மை செய்வேன், தீமை செய்தால் தீமை செய்வேன் என்று கூறற்க. நன்மை செய்தால் நன்மை செய்வேன், தீமை செய்தால் தீமை

செய்யேன் என்று உறுதி செய்துகொள்க. இ

நன்றி யறிதல்

நன்றி மறத்தலே பாவங்களில் தலையாயது. 6.Τ

உனக்கு நன்மை செய்வோர்க்கே நீ நன்மை செய்வ தான்ால், அதில் உள்ள மேன்மை யாது? பாவிகள் கூட அவ்வாறுதான்ே செய்கிறார்கள்? கி

நாடு

நாட்டின் செல்வம் பொருளன்று, அறமே யாகும்.

செங்கோல் உள்ள நாட்டில் தரித்திரமும் தாழ்வும் நாண வேண்டியவை, கொடுங்கோல் உள்ள நாட்டில் சீரும் செல்வமும் நாண வேண்டியவை. &5

நாணம் நாணமே அறத்தின் தாய், இரக்கமே அன்பின் தாய். நன்மை தீமை வேறுபாடு தெரிவதே அறிவின் தாய், பிறர் நலம் பாராட்டுவதே நட்பின் தாய். தா

நாவடக்கம் ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநரகத்து உய்ப்பிக்கும்