பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சலோம்

முதல் வீரன் :

ஏன்? மற்றவர்களைப்போல அரசர்களுக்கும் ஒரு கழுத்துத்

தானே!

காப்படோசியன் :

அது அஞ்சத்தக்கதன்றோ?

சிரியா இளைஞன் :

இளவரசி எழுந்திருக்கிறாள். அவள் மேசையை விட்டு

நகருகிறாள். மிகவும் தொல்லை அடைந்தவள் போலத் தோன்று

கிறாளே! - ஆ இந்த வழியாகத்தான் வருகிறாள், நமது பக்கமாகத்

தான் வருகிறாள். எவ்வளவு மெலிந்து இருக்கிறாள்!

மன்னியின் பணியாள் : -

அவளைப் பார்க்காதே. உன்னை வேண்டுகிறேன்,

அவளைப் பார்க்காதே.

சிரியா இளைஞன் :

வழி தவறிப்போன புறாவைப் போலிருக்கிறாள் அவள். காற்றிலே நடுங்கும் அல்லி மலரைப் போலிருக்கிறாள் அவள்..... வெள்ளிமலரைப் போலிருக்கிறாள் அவள்.

(சலோம் நுழைகிறாள்)

சலோம் :

நான் இங்கிருக்க மாட்டேன், இருக்கவும் முடியாது.

அரசன் பொழுதெல்லாம் என்னையே ஏன் பார்க்கிறான்? என்

அன்னையின் கணவனே என்னை இப்படிப் பார்ப்பது வியப்

புதான். இதற்கு என்ன பொருள் என்று எனக்குத் தெரியவில்லை.

சிரியா வாலிபன் :

இளவரசி, விருந்திலிருந்து இப்பொழுதுதான் வந்தீர்களா?