பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 24

சலோம் :

ஆ, ஆ, இங்கே எவ்வளவு இன்பமாக இருக்கிறது! அங்கே, விருந்து மண்டபத்திலே, எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் இருக் கிறார்கள். அவர்கள் மூடத்தனமான நடத்தைகளிலே ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லுகிறார்கள். ஓயாமல் குடித்துக் குடித்து, மதுவைக் கீழேயும் கொட்டிவைக்கும் அநாகரிகர்களும் அந்த விருந்து மண்டபத்திலே குழுமி இருக்கின்றனர். நுண்ணிய மதி யுடைய எகிப்தியர்களும், அழகிய விழிகளையும் கன்னங் களையும் உடைய கிரேக்கர்களும், விலங்காண்டித் தன்மை நிறைந்த உரோமானியர்களும் அங்கே கூடியிருக்கிறார்கள். ஆ! உரோமானியர்கள் என்றால் எனக்கு எவ்வளவு வெறுப்பு உண்டா கிறது! அவர்கள் முரடர்களாயிருந்தபோதிலும் உயர் குலத்துச் செல்வர்களைப்போல் நடிக்கிறார்கள். சிரியா இளைஞன் :

சற்று உட்காருகிறீர்களா? மன்னியன் பணியாள் :

அவளோடு ஏன் பேசுகிறாய்? அவளை ஏன் பார்க்கிறாய்? ஐயோ, அஞ்சத்தக்க நிகழ்வு ஏதாவது நிகழும். சலோம் :

நிலவு பார்ப்பதற்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது. அது ஒரு சிறிய நாணயம் போல இருக்கிறது. அது குளிர்ச்சியாகவும் அடக்கமாகவும் இருக்கிறது. அது ஒரு கன்னிப்பெண் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். கன்னிப்பெண்ணிற்கு உரிய அழகு அதனிடம் இருக்கிறது. ஆம், அது ஒரு கன்னிப்பெண், அது ஒருபோதும் தனக்குக் களங்கம் உண்டாக்கிக் கொண்டதில்லை. அது மற்ற தேவதைகளைப் போல மனிதர்கள் கையில் அகப் பட்டுக் கொள்ளவில்லை. சோகனான் :

தேவன் வந்துவிட்டான். மனித குமாரன் வந்துவிட்டான். ஆட்பரிகள் ஆறுகளிலே ஒளிந்துகொண்டன. நீரணங்குகள் ஆறு