பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 34

சோகனான் :

யார் பேசுகிறது?

சலோம் :

சோகனான், வனப்பு மிகுந்த உன் உடலின் மேல் எனக்குக் காதல் உண்டாகிறது. களை வெட்டாத நிலத்திலே வளர்ந்தி ருக்கும் அல்லி மலர்களைப்போல வெண்மையாய் இருக்கிறது உனது உடல், குன்றங்களிலே படிந்து பள்ளத்தாக்குகள் வழியாக ஓடி விழும் பனிக்கட்டியைப்போல வெண்மையாக இருக்கிறது. உனது உடம்பு. அராபிய அரசியின் பூங்காவிலே மலரும் வெண் மலர்கள் கூட உன்னைப்போல இவ்வளவு வெண்மையாய் இல்லை. அராபிய அரசியின் தோட்டத்திலே மலரும் செம் மலர் களோ, மணக்கும் இலைகளின் மேல் ஒளி வீசும் வைகறையின் பொற்பாதங்களோ, கடலை மார்போடு மார்பு தழுவிக்கொள்ளும் நிலவின் வெண் மார்போ............... உனது உடலைப்போல் வெண்மையான பொருள் உலகில் எங்குமே இல்லை. உனது திரு முகத்தைத் தொடவே பார்க்கிறேன்.

சோகனான் :

தள்ளிபோ பாபிலோன் மகளே, பெண்களாலேயே உல கத்தில் தீமைகள் பெருகுகின்றன. என்னோடு பேசாதே. நீ பேசு வதைக் கேட்கமாட்டேன். விண்ணக்கத்திலே உள்ள தேவனின் குரலை மட்டுமே கேட்பேன்.

சலோம் :

உனது உடல் அழகற்றதாய் இருக்கிறது. அது தொழுநோயா ளியினுடைய உடம்பைப் போலிருக்கிறது. அது விரியன் பாம்புகள் ஊர்ந்து சென்ற காரைச் சுவர்கள்போல இருக்கிறது. அது தேள்கள் வாழும் பொந்துகள் நிறைந்த சுவரைப்போலிருக்கி றது. அது அருவருக்கத்தக்க பொருள்கள் நிறைந்த கல்லறையைப் போலிருக்கிறது. உனது உடம்பு அச்சமானதாக, பெரும் அஞ்சத் தக்கதாக இருக்கிறது. சோகனான், உன்னுடைய கூந்தல்