பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

சலோம்

மேலேயே எனக்குக் காதல். அது, ஈதாம் நாட்டு கொடிமுந்திரிக் கொடிகளில் இருந்து கொத்துக் கொத்தாகத் தொங்கும் கருந்தி ராட்சைப் பழங்களைப்போல இருக்கிறது. இலெபனான் நாட்டு செடார் மரங்களைப்போல, பகலிலே கொள்ளைக்காரர்களும் அரிமாக்களும் ஒளிந்துகொள்ளுவதற்குப் புகலிடம் அளிக்கும் படர்ந்தடர்ந்த செடார் மரங்களைப்போல, இருக்கிறது. உனது குழல்முடி, காரிருள் நிறைந்த நீண்ட இராப்போதிலே நிலவுப் பெண் முகத்தை மறைத்துக்கொள்ளுகிறாள், விண்மீன் அஞ்சித் திகிலுறுகின்றன. அந்த இராப்போதைக் காட்டிலும்; கருமை மிகுந்து விளங்குகிறது உனது தலைமயிர். காடுகளிலே நிலவும் அமைதிகூட உனது தலைமுடிபோல இவ்வளவு இருள் மிகுந்த தில்லை, அதற்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை....... அதைத் தொட்டுப் பார்க்கிறேன்.

சோகனான் :

தள்ளிப்போ, சோடாம் குமாரியே, என்னைத் தொடாதே தேவன் வாழும் இந்த கோயிற்கு மாசு விளைவிக்காதே.

சலோம் :

உன்னுடைய தலைமுடி அஞ்சத்தக்கதாக இருக்கிறது, அதிலே சேறும் தும்பும் படிந்திருக்கிறது. முள்ளால் ஒரு முடி செய்து, அதை உன்னுடைய தலையிலே கவிழ்த்தலைப் போல் இருக்கிறது. கரும் பாம்புகள் உன்னுடைய கழுத்தைச் சுற்றிச் சுற்றி நெளிவதுபோல இருக்கின்றன, இந்த மயிர்க் கற்றைகள். உன் தலைமுடியில் எனக்கு காதல் இல்லை........ சோகனான், உனது இதழ்களின் மீதே எனக்கு காதல். தந்த துணியின்மேல் இருக்கும் சிவப்பு மலரைப்போல இருக்கிறது, அது. கொல்லிப் பூங்கா விலே மலரும் மாதுளை மலர்கள், செம்மலர்களைக் காட்டிலும் சிவப்பாக இருக்கின்றன. ஆனால் அவைகூட உனது இதழ்களுக்கு முன் நிற்கா. திருக்கோயில்களிலே சுற்றி அலைந்து, குருக்கள் அளிக்கும் உணவை உண்டு நாள்களைக் கழிக்கும் புறாக்களின்