பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 சலோம்

மன்னியின் பணியாள் :

சிரியா வாலிபன் தற்கொலை செய்துகொண்டான் காவலர் தலைவன் மாய்ந்தான்! என் அன்பன் மறைந்தான் வெள்ளிக்கடுக் கனையும் நறுமணப்பேழையையும் அவனுக்குப் பரிசாக அளித்தேன். அவனோ, தற்கொலை செய்துகொண்டான். ஏதாவது மாறுபாடு நேரும் என்று அவன் முன்னமே கூறினான் அல்லவா? அதைப்போலவே நடந்திருக்கிறது. நிலவு ஒரு பிணத்தைத் தேடி அலைந்தது என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால், அது காவலர் தலைவனுடைய பிணத்தைத் தேடியலைந்தது என்பது எனக்குத் தெரியாதோ ஐயோ, நிலவுக்குத் தெரியாமல் அவனை ஒளித்திருக்கலாகாதா நான்?

முதல் வீரன் :

இளவரசியே, காவலர் தலைவன் தற்கொலை செய்து

கொண்டான்.

சலோம் :

சோகனான், உன்னுடைய இதழ்களை முத்தமிடுகிறேன்.

சோகனான் :

நீ அஞ்சவில்லையா? காலதேவன், அரண்மனையிலே

சிறகு அடித்துக்கொண்டிருக்கும் ஒலி கேட்கிறது என்று உனக்குச்

சொல்லவில்லையா, நான்?

சலோம் :

உனது வாயை முத்தம் இடுகிறேன், சோகனான்!

சோகனான் :

பாபிலோன் குமாரியே, உன்னைக் காத்து காப்பாற்றக்கக் கூடிய மெய்ப்பொருளைப் பற்றியே நான் பேசினேன். போ, அவனைத் தேடு, அந்தப் மெய்ப்பொருள், தேவர் தேவன், கலீலி கடலிலே ஒரு படகிலே அமர்ந்து தொண்டர்களுடன் பேசிக்