பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 சலோம்

மன்னன் :

எங்கே அதைக் கொண்டு வாருங்கள் | ஆ என்ன அது? மறந்து போனேனே..... ஆ.... நினைவு வந்தது.

அறிவனுடைய குரல் :

'காலம் வந்து விட்டது. நான் சொன்னது நிகழப்போகிறது’ என்று வானகத் தந்தை கூறுகிறார்.

மன்னி :

பேசாமல் இருக்கச் சொல்லுங்கள், அவனை. அவனுடைய குரலைக் கேட்கப் பொறுக்க முடியவில்லை. அவன் எப் பொழுதும் என்னைப்பற்றியே பழித்துக் கொண்டிருக்கிறான்.

மன்னன் :

உன்னைப் பற்றி அவன் எதுவும் சொல்லவில்லையே! அவன் ஒரு பெரிய தீர்க்கதரிசி.

மன்னி :

முற்றுணர்ந்தோர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை, எதிர் காலத்தில் நடக்கப்போவதை யாரால் சொல்ல முடியும்? ஒரு வராலும் முடியாது. நிற்க அவன் எப்பொழுதும் என்னைப் பழிக் கிறான். நீங்களும் அவனைக்கொண்டு அச்சப் படுகிறீர்கள் அல்லவா?

மன்னன் :

அவனிடம் எனக்கு அச்சம் இல்லை, யாரிடமும் எனக்கு அச்சம் இல்லை.

மன்னி :

அவனைக் கண்டு நீங்கள் அஞ்சுகிறீர்கள். அது எனக்கு நன்றாகத் தெரியும். அச்சம் இல்லை என்றால், அவனை யூதர்கள் வயம் ஒப்புவிப்பதற்கு என்ன?