பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 சலோம்

மன்னன் :

அப்படியானால், வேறு யாரைப்பற்றி?

முதல் நாசரீன் :

நிலவுலகில் தோன்றிய தெய்வ குமாரனைப்பற்றி.

ஒரு யூதன் :

தெய்வகுமாரன் இன்னும் தோன்றவில்லை.

முதல் நாசரீன் :

அவன் தோன்றிவிட்டான், அவன் உலகம் எங்கும் அற்புதம் இயற்றி வருகிறான்.

மன்னி :

ஆ ஆ! அருள் விளையாடலா! எனக்கு அருள்விளையாடல்

நம்பிக்கை இல்லை. நான் எத்தனையோ புதுமைகளைப் பார்த்தி ருக்கிறேன்.

(ஏவலாளை நோக்கி) விசிறி கொண்டுவா.

முதல் நாசரீன் :

இந்த அறிவன் உண்மையாகவே புதுமை நிகழ்த்தி வரு கிறான். கலீலி நகரிலே நடந்த ஒரு திருமணத்திலே நீரை மதுவாக மாற்றினான். அங்கே போயிருந்தவர்கள் என்னிடம் சொன் னார்கள். தொட்ட நொடியிலே, இரு தொழுநோயாளிகளைக் குணப்படுத்தினான்.

இரண்டாம் நாசரீன் :

அவனால் குருடர்களுக்கும் பார்வை வந்தது. மலைகளிலே தேவதைகளுடன் பேசியிருக்கிறான்.

ஒரு சடுசியன் :

தேவதைகள் இல்லை.