பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகர் ஒயில்ட்டு 50

ஒரு பாரிசியன்:

தேவதைகள் இருக்கின்றன. ஆனால், அறிவன் சோகனான் அவற்றுடன் பேசினான் என்பதை நான் நம்பவில்லை.

முதல் நாசரீன் :

அவன் மலைமுடிகளிலே தேவதைகளுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பெருந் திரலான மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஒரு சடுசியன் :

தேவதைகளுடன் இல்லை. எரோதியாக :

ஆ என்னென்ன பேசுகிறார்கள் இவர்கள் மிக்க களைப்பை உண்டாக்குகிறார்களே (பணியாளனை நோக்கி) விசிறி, விசிறி (பணியாளன் விசிறியைக் கொடுக்கிறான்) கனவு கண்டவனைப் போல இருக்கிறதே உன் முகம், கனவு காணாதே. (விசிறியால் பணியாளனை அடிக்கிறான்.) இரண்டாவது நாசரின் :

இன்னொரு புதுமை இருக்கிறது.

மன்னி :

இவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. நிலவினை வெகுநேரம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அல்லவா? முதல் நாசரீன் :

சேருசுட்ைய புதல்வி இறந்துபோனாள், முற்றுணர்த்தோன் அவளை எழுப்பினான்.

மன்னன் :

செத்தவர்களையா பிழைக்கவைக்கிறான்? முதல் நாசரீன் :

ஆம், அரசே!