பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசுகார் ஒயில்ட்டு 54

மன்னி :

நீங்கள் அவளைப் பார்க்கக்கூடாது.

அறிவனுடைய குரல் :

அன்று செங்கதிர் கருங்கோளமாக விளங்கும், வெண்

மதியம் குருதியைப் போலச் செக்கச் செவேலென்று இருக்கும்.

வானுலகிலே சுடர்விட்டு ஒளிரும் விண்மீன், அத்திப் பழங்

களைப் போலப் பொல பொல வென்று மண்ணிலே உதிரும்,

மன்னர்கள் கலக்குவார்கள்.

மன்னி :

ஆ வான்மதி சிவந்து, விண்மீன்கள் பழங்களைப் போலக் கீழே உதிரும் அந்த நாளைக் காண நான் விரும்புகிறேன். இந்த

முற்றுணர்தோன் குடிகாரனைப்போலப் பேசுகிறான்.......... அfெ னுடைய குரல் பொறுக்க முடியவில்லை. அவனை வாயை மூடச் சொல்லுங்கள்.

மன்னன் :

அவன் சொல்லுவது விளங்கவில்லை. இது பின்வரும் நிகழ்ச்சிக்கு அறிகுறியாக இருக்கலாம்.

மன்னி :

தீக் குறிகளிலே எனக்கு நம்பிக்கை இல்லை. அவன் குடிகா ரனைப்போலப் பேசுகிறான்.

மன்னன் :

ஆம், அவன் தெய்வ மதுவைக் குடித்திருக்கலாம்.

மன்னி :

தெய்வ மதுவா! அது எங்கே கிடைக்கிறது? எந்தத் தொழிற் சாலையிலே உண்டாக்குகிறார்கள்?