பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சலோம்

மன்னன் :

(சலோமைப் பார்த்துக்கொண்டே) திசெல்லினசு, நீ உரோமில் இருந்தபோது, கோவேந்தன் அது தொடர்பாக ஏதாவது சொன்னாரா?

மன்னி :

எது பற்றி வேந்தே?

மன்னன் :

எது பற்றியா? ஆ. மறந்துவிட்டேன், உன்னிடம் ஏதோ கேட்டேன் அன்றோ?

மன்னி :

நீங்கள் மீண்டும் என் மகளையே பார்க்கிறீர்கள். அவளைப் பார்க்கக்கூடாது. முன்னாலேயே சொல்லி இருக்கிறேன் அல்லவா?

மன்னன் :

நீ அதையே சொல்லுகிறாயேயொழிய வேறு ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறாயே!

மன்னி :

நான் மீண்டும் அதையே சொல்லுகிறேன்: என் மகளைப் பார்க்காதீர்கள், வாருங்கள், உள்ளே போவோம்.

மன்னன் :

சலோம், கொஞ்சநேரம் நடனம் ஆடேன்!

மன்னி :

முடியாது, அவளை நடனமாட விடமாட்டேன்.

சலோம் :

அரசே, நடனமாட எனக்கு விருப்பம் இல்லை.