பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசுகார் ஒயில்ட்டு

களை மானக்கேடு செய்திருக்கிறான். மனத்தைப் புண்படுத்தும் சொற்களைப் பேசி இருக்கிறான் அவன். அவன் உரோமிற்கு வரும்போது சீசர் அவனைக் கொன்றுவிடுவார். சீசர் அவனைக் கொல்லுவது உறுதி, இல்லாவிட்டால், அவனைப் புழுக்கள் அரித் துத் தின்றுவிடும், முற்றுணர்ந்தோன் சொன்னது உண்மைதான். உண்மை, சலோம், ஏன் காலந்தாழ்த்துகிறாய்?

சலோம் :

      நடன உடைகளைக் கொண்டுவருமாறு

வேலைக்காரர்க ளிடம் சொல்லியிருக்கிறேன். அதற்காகவே காத்துக்கொண்டிருக் கிறேன் (வேலைக்காரர்கள் வருகின்றனர்.)

மன்னன் :

   வெறுங் காலுடனா நடனமாடப்போகிறாய்! சரி, உனது மெல்லிய சிற்றடிகள் வெண்புறாக்களைப் போன்றிருக்கின்றன, அவை மரங்களின் மேல் நடனமாடிக்கொண்டிருக்கும் வெண் மலர்களைப்போல இருக்கின்றன. இல்லை, இல்லை, அவள் குருதியின் மேல் நடனமாடப்போகிறாள். நிலத்திலே குருதி சிந்தி இருக்கிறது. நீ அரத்தத்தின்மேல் நடன மாடக்கூடாது இது ஒரு தீக் குறி.

மன்னி :

  உங்களுக்கு என்ன, அவள் அரத்தத்தின்மேல் நடனமா டினால்?

மன்னன் :

    உங்களுக்கு என்னவா ?....... வெண்ணிலவைப் பார்! அது அரத்தத்தைப் போலச் சிவந்திருக்கிறது, ஆ, முற்றுணர்ந்தோன் கூறியது உண்மை, வானிலா அரத்தத்தைப்போலச் சிவக்கும் என்று அவன் கூறினானல்லவா ? நீங்கள் எல்லோரும் அதைக் கேட்டீர்கள், இப்போதுபாருங்கள், நிலவு சிவந்திருக்கிறது.