பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

skosni GuideoLG 64

மன்னன் :

வியப்பு பெருவியப்பு: அரசியே பார் சலோம், அருகே வா! உனக்கு வேண்டிய பரிசைக் கேள், நடன மங்கையர்களுக்கு நான் நிறையப் பணம் கொடுக்கிறேன். உனக்குப் பெரிய நன்கொடை அளிக்கிறேன், என்ன வேண்டும், சொல்.

சலோம் :

(குனிந்தவாறு) இப்போதே ஒரு வெள்ளித்தட்டில் .....

மன்னன் :

(சிரித்தவாறு) வெள்ளித் தட்டிலா? ஆம் வெள்ளித் தட்டி லேயே! உம், வெள்ளித் தட்டிலே என்ன வேண்டும்? சலோம். அழகியே, யுதேப்ா மங்கையர்க்கரசியே, வெள்ளித் தட்டிலே என்ன கொண்டு வரச்சொல்ல வேண்டும். சொல். வேண்டியதைக் கொண்டு வரச் சொல்லுகிறேன், என்னுடைய செல்வம் அனைத்தும் உன்னுடையதே, என்ன வேண்டும், சொல்.

சலோம் :

(எழுந்து) அறிவன் - முற்றுணர்ந்தோனின் தலை.

மன்னி :

ஆ. அப்படிக் கேள் மகளே!

மன்னன் :

வேண்டா, சலோம், வேண்டா. அம்மா, சொல்லுவதைக் கேளாதே. அவன் எப்பொழுது தீமையையே சொல்கிறள்.

சலோம் :

அம்மா சொல்லுவதை நான் பொருட்படுத்தவில்லை. என்னிச்சையாக நான் கேட்கிறேன். வெள்ளித்தட்டிலே அறிவன் சோகனான் தலைவேண்டும். மன்னன் நீங்கள் உறுதி செய்திருக் கிறீர்கள். சூளுரை செய்திருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடா தீர்கள்.