பக்கம்:சலோம்-ஆஸ்கார் ஒயில்டு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சலோம்

மன்னி :

என் மகள் செய்த செயல் எனக்குப் பிடித்திருக்கிறது. இனி. நான் இங்கேயே இருக்கப்போகிறேன். -

மன்னன் :

(எழுந்தவாறு) பழிகாரி வா, நான் இனி இங்கிருக்க மாட்டேன். வா, போகலாம், ஏதாவது தீங்கு நிகழப்போகிறது என்பதில் ஐயம் இல்லை. மானசசே, இசாசார், ஒசியசு விளக்கு களை அணையுங்கள். நான் எதையும் பார்க்கம்ாட்டேன். கண்கள் எதுவும் பார்க்க விடவும் மாட்டேன், விளக்குகளை அணை யுங்கள், நிலவினை மூடுங்கள், விண்மின்களை மறையுங்கள். அரசி எரோதியாசி, நாமும் அரண்மனையிலே ஒளிந்து கொள்வோம். எனக்கு அச்சமாய் இருக்கிறது. (பணியாளர்கள் விளக்குகளை அணைக்கிறார்கள். விண்மின்கள் மறைகின்றன. பேரூருவமான ஒரு கருமேகம் ஊர்ந்து வந்து நிலவினை மூடிக் கொள்கிறது)

சலோம் :

சோகனான், நான் உன் வாயை முத்தமிட்டேன், உன் உத டுகள் கசக்கின்றன. அரத்தத்தினாலோ?..... ஒரு வேளை அரத்தம் படிந்து அதுபோல் இருக்கிறதோ? ஒரு வேளை காதல் சுவையாக இருக்குமோ? காதல் கசக்கும் என்று சொல்லுவார்கள். அதனால் என்ன? உனது இதழ்கள் முத்தமிட்டுவிட்டேன் அல்லவா? (சலோம் மீது ஒரளவு நிலாக்கதிர் படுகிறது).

மன்னன் :

(திரும்பி, சலோமைப் பார்த்துக் கொண்டே) கொல்லுங் கள், அவளைக் கொல்லுங்கள்:

(படைஞர்கள் ஒடிச்சென்று மன்னி எரோதியாவின் புதல் வியும் யூதேயா நாட்டு இளவரசியுமாகிய சலோம் மீது, கத்திகளை iசிக் கொல்லுகின்றனர்.)

★ ★ ★