பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

(இதில் ஐந்தாண்டுகள் என்பதை, அரசினர் விருப்பத்திற்கும் விரைவுக்கும் வினைக்கடுமைக்கும் ஏற்ப குறைக்கவும் செய்யலாம்)

2. அகநிலைச் சீராக்கங்கள் : இரண்டாம் நிலை - ஐந்தாண்டு)

கல்வி, தொழில் முறை ஏற்பாடுகளில், மக்களைக் கீழ்வரும் நான்கு நிலைப் பொருள், இனப் பகுப்புகளாகப் பகுத்து முன்னேறுவதற்குரிய சலுகைகளைத் தருதல்.

1. மிக முன்னேறியவர்கள் (மி.மு.ஏ): சாதியாலும் பொருளியலாலும் முன்னேறியவர்கள். இவர்களுக்கு வகைக்கு இரண்டிரண்டு கூடுதல் எண்கள் மேனி நான்கு எண்கள் (+2+2=+4) தரப்பெறுதல் வேண்டும்.

2. முன்னேறியவர்கள் (மு.ஏ.): சாதி, பொருளியல் இவற்றுள் ஏதேனும் ஒன்றில் மேம்பட்டு நிற்பவர்கள் இவர்களுக்கு இரண்டு கூடுதல் எண்கள் (+2) தரப்பெறுதல் வேண்டும்.

3. பின் தங்கியவர்கள் (பி.த); சாதி, பொருளியல் இவற்றுள் ஏதேனும் ஒன்றில் பின்தங்கி நிற்பவர்கள் இவர்களுக்கு இரண்டு குறைதல் எண்கள் (-2) தரப்பெறுதல் வேண்டும்.)

4. மிகப் பின்தங்கியவர்கள் (மி.பி.த.):

(சாதியாலும் பொருளியலாலும்) - இவர்களுக்கு இரண்டிரண்டு குறைதல் எண்கள் (-2-2=4) தரப்பெறுதல் வேண்டும்.

இந்த எண்கள் அடிப்படையில் அவர்களுக்குத் திட்டமிடப் பெற்ற சலுகைகள் தரப்பெறுதல்வேண்டும்.

இவர்களின் தரத்துக்கு அடையாளமாகக் கல்வி, தொழில் வகைச் சான்றிதழ்களில், இந்நான்கு வகையான எண் குறியீடுகளே இடப்பெறுதல் வேண்டும் மற்றும் இவர்களுக்கான சாதிக் குறியீடுகள் முதற்பதிவை மிகக் கமுக்கமாக வைத்தல் வேண்டும் (தேவையானால் குறிப்பிட்ட கால எல்லைக்குப் பின்னர் அவற்றையும் அழித்து விடலாம்)

(எ-டு)

1. நலங்கிள்ளி (+4) 3. நெடுஞ்செழியன் (-4)

2. சேரலாதன் (+2) 4. இளங்குட்டுவன் (-2)

3. அகநிலைச் சீராக்கங்கள் : (மூன்றாம் நிலை - ஐந்தாண்டு)

இரண்டாம் ஐந்தாண்டுப் பதிவாளர்களை மறுஆய்வு செய்தும், பிறரைப் புதுமுறையிலும், கீழ்க்காணும் வகையில் இருநிலை-பொருள், இன மக்கள் பகுப்புகளாகப் பிரித்து, முன்போலவே எண் குறியிட்டு, முன்னேற்றத்துக்குரிய சலுகைகளைத் தருதல் வேண்டும்.

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/21&oldid=1164324" இலிருந்து மீள்விக்கப்பட்டது