பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1) மிக முன்னேறியோர் (மி.மு.ஏ):

சாதி + பொருள் = +2

2) மிகப் பின் தங்கியோர் (மி.பி.த.):

சாதி + பொருள் = -2

4. அகநிலைச் சீராக்கங்கள்: நான்காம் நிலை - பத்தாண்டு)

மூன்றாம் ஐந்தாண்டுப் பதிவாளர்களை மறு ஆய்வு செய்தும், பிறரைப் புதுமுறையிலும், கீழ்காணும் வகையில் இருவகைப் பொருள்வகை மக்கள் பகுப்புகளாகப் பிரித்து, முன்போலவே எண்குறிகளடிப்படையில் முன்னேற்றத்துக்குரிய சலுகைகளைத் தருதல் வேண்டும்.

1. அரசுதவி தவிர்த்தோர் (அ.உத): பொருள் நிலை மட்டும் (+) 2. அரசுதவி பெறுவோர் (அ.உ.பெ) பொருள் நிலை மட்டும் (-)

5. 25 ஆண்டுகளுக்கு மேல் (ஐந்தாம் நிலை)

பொருள் நிலைச் சலுகைகளைத் தேவையானால், மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து தரலாம். தேவையில்லையெனில் நீக்கி விடலாம்.

ஆனால், மேற்குறித்த 25 ஆண்டுக் காலத்திற்குள் சாதியுணர்வுகளும் பெயர்களுமே ஒழிந்துபோய்விடும். மொழி தழுவிய தேசிய இனப் பெயர்களே தமிழர், ஆந்திரர், கன்னடர், மலையாளர் முதலியனவே நிற்கும். புதிய பொருள் நிலைக் குமுகாயந் தோன்றிவிடும்.

இத்திட்டம் பொதுமக்கள் கவனத்துக்கும், அரசுப் பார்வைக்கும் வந்து, மேற்கொண்டு விளக்கங்கள் கேட்கப் பெறும் பொழுது, விரிவாகவும் விளக்கமாகவும் நடைமுறை வடிவாக்கித் தரப்பெறும். இப்பொழுது இந்த அளவில் போதும் என்று கருதுகிறோம்.

எவ்வாற்றானும் சாதித் தொடர்பான அனைத்து நிலைகளும் நம் காட்டு விலங்காண்டித்தனத்தையே காட்டுவனவாகும் எனும் உணர்வு நம்மிடையே வேண்டுவதாகும்.

(தென்மொழி சு-17; ஓ1, 2 ஆசிரியவுரை)
(1980)

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/22&oldid=1164326" இலிருந்து மீள்விக்கப்பட்டது