பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சத்திரம் முதலியன), சுடுகாடு இடுகாடுகள் (சக்கிலியன் சுடுகாடு முதலியன), கோயில்கள் (சாணார் கோயில் முதலியன), ஆகியவற்றிற்கு உடனடியாகப் பொதுப் பெயர் சூட்டச் செய்வதுடன் அதை மீறிச் செய்வாரைக் கடுமையான தண்டங்களிட்டுத் தடுத்தல்.

3. எவர் பெயருக்குப் பின்னும் சாதிப் பட்டங்களை (காமராச நாடார், இலக்குமணசாமி முதலியார், சிதம்பரநாதச் செட்டியார் என்றபடி) குறித்தல் கூடாதென்று சட்டத்தாலும் தண்டத்தாலும் தடுத்தல்.

4. கலப்பு மணங்களை வற்புறுத்தல்: 1, ஒரு குறிப்பிட்ட காலம்வரை தம் தம் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்பவர்களிடம் திருமண வரியாகப் பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் உருபா தண்டுதல். 2. இந்த வரி வருமானத்தைக் கொண்டு, கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு வேலைச் சலுகை, கல்விச் சலுகை, குடியிருப்புச் சலுகை முதலியன தந்து ஊக்குவித்தல்)

5. ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஓரினத்தைச் சேர்ந்தவரைப் பிறிதோர் இன மக்கள் வாழும் சூழலிலும், ஒரு வட்டத்தைச் சார்ந்தவர்களைப் பிறதொரு வட்டத்திலும் சட்டமன்ற, பாராளுமன்றங்களுக்கான வேட்பாளர்களாக நிறுத்தல்.

6. சாதி சமயக் குறியீடுகளை அறவே எவரும் அணியவோ தீட்டிக் கொள்வதோ கூடாவென்று தடுத்தல்.

7 தாழ்ந்த சாதி மக்களே செய்து வருகின்ற இழி தொழில்கள் சிலவற்றை அவர்கள் செய்யாமல் தடுத்து அத்தொழில்களை புதிய அறிவியல் முறைகளைக் கொண்டு நடத்துவிக்கச் செய்தல்.

8. சாதிகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் எழுதப் பெறும் சீர்திருத்த நூற்களன்றிப் பிறவகையில் சாதிப் பாகுபாடுகளை வற்புறுத்தும் அற நூற்கள் (மனு முதலியன), இன நூற்கள் முதலிவற்றிற்குத் தடைபோடுதல்.

9. சாதி அடிப்படையில் தனிப்பட்ட சலுகைகளை எவர்க்கும் வழங்காது மக்கள் ஏழ்மை யடிப்படையில் எல்லார்க்கும் பொதுவான கல்வி, தொழில் முதலியவற்றை அமைத்துத் தருதல்.

10. சாதி வெறியர்களைத் தோன்ற விடாது பல்வகையாலும் தடுத்து நிறுத்தல்.

ஆனால் இவற்றை யெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வரும் துணிவும், அறிவும் உணர்வும் எந்தவொரு கட்சிக்கோ, தலைவர்க்கோ, அவரால் அமைக்கப் பெறும் குடியரசு ஆட்சி அமைப்பிற்கோ இருக்கப் போவதில்லை என்று உறுதியாகக் கூறலாம். பட்டாள ஆட்சியோ,

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/38&oldid=1164348" இலிருந்து மீள்விக்கப்பட்டது