பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


தமிழ்க்குமுகாயத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களிடையே ஒற்றுமையின்மை பெரிய தடையாயுள்ளது. ஒற்றுமையின்மைக்குக் கரணியங்களாக அவர்களிடையே உள்ள சாதிப் பிரிவினைகளும் அப்பிரிவுகளிலே அவர்களுக்கு இருக்கும் விடாப்பிடியான பற்றுமே விளங்குகின்றன.

குமுகாய முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோர், இதுகுறித்து மக்களிடையே பலவாறாக கருத்துரை பரப்பி ஒரளவு செயலிலும் ஈடுபட்டு உழைத்து வந்துள்ளனர்; வருகின்றனர்.

"எப்படியேனும்இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும்-என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!”

என்று தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் தமிழகத்திற்காகவும் நாற்பான் ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டவர் நம் பாவலரேறு ஐயா அவர்கள். தமிழ் மக்களில் பலரும்,

“சாதிப்புழுக்கள் நெளிந்திடும் ஓர்மொத்தைச்
சாணித் திரளையாய்”

வாழ்கிறார்களே என்று பெரிதும் கவலையுற்றார். மலையகம் சிங்கை முதலிய வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்கள்கூட தங்களுடன் சாதிக்குப்பையைச் சுமந்து சென்று அங்கேயும் சாதி அமைப்புகளை அமைத்துக்கொண்டு பூசலிடுவதை அறிந்து, தமிழன் நிலா மண்டிலத்துக்குப் போய் வாழ நேரிட்டாலும் சாதி என்னும் சாணிச்சட்டியில்தான் தன் தலையைத் தோய்த்துச் கொள்வானோ என்று மனம் புழுங்கினார். *

ஆகவே சாதிஒழிப்பைத் தன் முகாமையான பணிகளில் ஒன்றாக எடுத்துக்கொண்டு மேடைகளிலும் இதழ்களில் பாடல்களிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ்மக்களுக்கு சாதி ஒழிப்பின் தேவையை தம் வாணாள் முழுமையும் வலியுறுத்தி வந்தார். தம் சொந்த வாழ்க்கையிலும் இக்கொள்கையை மாறாமல் கடைப்பிடித்தார். சாதி ஒழிப்பில் ஈடுபட்ட இயக்கங்களுடன் ஒத்துழைத்தார். சாதிகள் தோன்ற கரணியமான வர்ணப் பிரிவினை கூறிய மனுநூல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை புகுந்தார்.

ஒடுக்கப்படும் பிரிவினர்க்குரிய இட ஒதுக்கீட்டுடன் கூடிய சாதி ஒழிப்புக்கு நல்ல ஒரு மாற்றுத் திட்டம் தீட்டி வெளியிட்டார். மக்களும்

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/6&oldid=1164376" இலிருந்து மீள்விக்கப்பட்டது